games

img

ஐபிஎல் 2024

மும்பை சூப்பர் பார்மில் ரிஷப் பண்ட் மகிழ்ச்சியில் இந்திய கிரிக்கெட் உலகம்

இந்திய அணியின் விக்கெட் கீப்பரும், அதிரடி பேட்டரு மான ரிஷப் பண்ட் கடந்த 2022 டிசம்பர் மாதம் தில்லியிலிருந்து உத்தரகண்ட் மாநிலம் ஹரித்வாருக்கு செல்லும் பொழுது கார் விபத்தில் சிக்கி படுகாயமடைந்தார். 7 மாத மருத்துவ சிகிச்சை மற்றும் 5 மாத பயிற்சிக்குப் பிறகு நடப்பு ஆண்டு ஐபிஎல் சீசனில் ரிஷப் பண்ட் களமிறங்கினார்.  உயிர்பிழைத்து கிரிக்கெட் வாழ்விற்கு வந்த ரிஷப் பண்டிற்கு மீண்டும் கேப்டன் பொறுப்பை வழங்கி யது தில்லி அணி நிர்வாகம். தில்லி  அணியின் ஆதரவு மற்றும் நம்பிக்கைக் கும், தனது கிரிக்கெட் வாழ்க்கைக்கு வலுசேர்க்கும் வகையில் ரிஷப் பண்ட் நடப்பு சீசன் ஐபிஎல் தொடரில் மிக அரு மையாக விளையாடி வருகிறார். கேப்டன் பொறுப்பிலும் வழக்கமான பாணியில் சுழன்று வரும் ரிஷப் பண்ட், புதனன்று நடைபெற்ற குஜராத் அணிக்கெதிரான லீக் ஆட்டத்தில் 43  பந்துகளில் 88 ரன்கள் குவித்து மிரட்டி னார். மேலும் இதே ஆட்டத்தில் இக்கட் டான சூழ்நிலையில் தோனியைப் போல வியூகம் அமைத்து 4 ரன்களில் பலமான குஜராத் அணியை வீழ்த்த உதவினார்.  ரிஷப் பண்ட்டின் இத்தகைய செயல்பாடு இந்திய கிரிக்கெட் கட்டுப் பாட்டு வாரியத்திற்கு (பிசிசிஐ) மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காரணம் ரிஷப் பண்ட் கீப்பர், அதிரடி பேட்டிங், கேப்டன் வியூகம் என தோனி யைப் போல செயல்திறன் கொண்டவர் என்பதால், அவரை வருங்கால கேப்ட னாக நிலைநிறுத்த மிகுந்த ஆதரவை வழங்கியது பிசிசிஐ. ஆனால் காயம் காரணமாக சிறிதளவு இடைவெளி ஏற்பட்ட நிலையில், ரிஷப் பண்ட் மீண்டும் பார்முக்கு திரும்பி இருப்பது ஒட்டுமொத்த இந்திய கிரிக்கெட் உல கிற்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது.

இரவிலும் வெளிப்படும் வெப்பம் மூச்சுத்திணறும் மைதானங்கள்  அவதிக்குள்ளாகும் ரசிகர்கள்

இமயமலை சாரலில் உள்ள மாநிலங்களை தவிர மற்ற மாநிலங்களில் வெயில் கொளுத்தி வருகிறது. குறிப்பாக தமிழ்நாடு,  ஒடிஷா, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநி லங்களில் வெப்ப அலையுடன் வெயில் மிரட்டி வருகிறது. கடப்பா (ஆந்திரா), புவனேஸ்வரம் (ஒடிசா), ஈரோடு (தமிழ்நாடு) உள்ளி ட்ட மாநிலங்களில் 110 டிகிரி மேலான அளவில் வெயில் கொளுத்தி வருகிறது.  முக்கியமாக பகலில் மிரட்டும் வெயிலின் தாக்கம் இரவிலும் (வெப்பத்தின் அழுத்தம் குறையா மல்) எதிரொலிக்கிறது. இதனால் மக்கள் இரவில் உறக்கமின்றி தவித்து வரும் நிலையில், ஐபிஎல் கிரிக்கெட் மைதானங்களில் ரசிகர் கள் படாதபாடுபடுகிறார்கள்.  இரவு நேர வெப்பத்தாலும், ஒரே  இடத்தில் 30,000க்கும் மேற்பட்ட ரசிகர்கள் இருப்பதாலும் ரசிகர்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். குறிப்பாக சென்னை, ஹைதராபாத், பெங்களூரு உள்ளிட்ட மைதானங்களில் ரசிகர் கள் மிக மோசமான அளவில் பாதிக்கப்பட்டுள் ளனர்.

டிரெண்டிங் வாய்ஸ்
டிரெண்டிங் வாய்ஸ் கிரிக்கெட் விளையாட்டில் ஆல் ரவுண்டர் ஆட்டத்தை சமநிலைப் படுத்துபவராக இருப்பார். ஆனால் ஐபிஎல் தொடரில் கடைபிடிக்கப்படும் இம்பாக்ட் முறையால் ஆல்ரவுண்டர்கள் தங்களது திறமையை வெளிப்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. முக்கியமாக இம்பாக்ட் முறை கிரிக்கெட் விளையாட்டை வேறுநிலை பொழுது போக்காக மாற்றும். இது கிரிக்கெட் விளையாட்டிற்கு நல்லதல்ல.

இன்றைய ஆட்டம்

கொல்கத்தா - பஞ்சாப்
(ஆட்டம் - 42)
இடம் : ஈடன் கார்டன் மைதானம், கொல்கத்தா, மேற்குவங்கம்
நேரம் : இரவு 7:30 மணி
சேனல் : ஸ்டார் ஸ்போர்ட்ஸ், ஜியோ சினிமா (இலவசம்)

 

 

;