games

img

ஆசியகோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா!

பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நேற்று நடைபெற்ற ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியில், பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது. 
துபாயில் நடைபெற்று வரும் ஆசியக் கோப்பையின் ஒரு பகுதியாக, நேற்று இந்தியா–பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்தப் போட்டி குறித்து மிகுந்த எதிர்பார்ப்பு நிலவியது. ஏனெனில் பகல்காம் தாக்குதலுக்கு பிறகு இந்தியா பாகிஸ்தானுடன் விளையாடக்கூடாது என பல தரப்பில் கடும் எதிர்ப்புகள் எழுந்தன. கூடுதலாக, போட்டியை ரத்து செய்ய உச்சநீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது.
ஆனால், உச்சநீதிமன்றம் அந்த வழக்கை விசாரிக்க மறுத்துவிட்டது. இந்நிலையில் நடைபெற்ற இந்தியா–பாகிஸ்தான் போட்டியில், இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி வெற்றியைப் பெற்றது.