games

img

கங்குலியின் உடல்நிலையில் முன்னேற்றம்....  உட்லாண்ட்ஸ் மருத்துவமனை தகவல்....   

கொல்கத்தா 
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) தலைவரும்,  அதிரடிக்கு பெயர் பெற்ற முன்னாள் இந்திய கிரிக்கெட் கேப்டனுமான சவுரவ் கங்குலிக்கு (48)  கடந்த 2-ஆம் தேதி நெஞ்சுவலி ஏற்பட்டு கொல்கத்தாவில் உள்ள வுட்லாண்ட்ஸ் (woodlands) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

இதயத்துக்குச் செல்லும் ரத்தக் குழாயில் 3 அடைப்புகள் இருப்பதாகத் தெரிவித்து ஆஞ்சியோ அளிக்கப்பட்டு அடுத்த சில நாட்களில் வீடு திரும்பினார்.  கங்குலியை அரசியலுக்கு வரச்சொல்லி பாஜக அளித்த அழுத்தமே அவரது லேசான மாரடைப்புக்கு காரணம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்களில் ஒருவரும், கங்குலியின் நெருங்கிய நண்பருமான அசோக் பட்டாச்சார்யா உள்ளிட்ட தலைவர்கள் கூறிய நிலையில், புதனன்று (ஜன., 27) மீண்டும் அவருக்கு  நெஞ்சுவலி ஏற்பட்டு அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

இதயத்தின் தமனி பகுதியில் ஏற்பட்டுள்ள அடைப்பைச் சரிசெய்ய 2 ஸ்டென்ட்கள் அறுவை சிகிச்சை மூலம் பொருத்தப்பட்டுள்ளன.   அறுவை சிகிச்சைக்கு பிறகு கங்குலியின் உடல்நிலை சீராக இருப்பதாக வுட்லாண்ட்ஸ் மருத்துவமனை நிர்வாகம் தகவல் வெளியிட்டுள்ளது. எனினும் சில பரிசோதனைகள் கைவசம் இருப்பதால் அவசர சிகிச்சை பிரிவில் தொடர்ந்து சிகிச்சை பெறுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.     

சிலிகுரி மாநகராட்சியின் முன்னாள் மேயரும்,  மார்க்சிஸ்ட் கட்சியின்  மேற்கு வங்க தலைவர்களுள்  ஒருவரான அசோக் பட்டாச்சார்யா தொடர்புகொண்டு நலம் விசாரித்தார். 

முகப்பில் உள்ள படம்... கோப்பு படம்  

;