games

img

விளையாட்டு

இலங்கையிலும் சர்ச்சை ஏற்படுத்திய கம்பீர் வலுக்கும் கண்டனம்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தொடக்க வீரரும்,  பாஜக எம்பியுமான கவுதம் கம்பீர் (41) தற்போது ஐபிஎல் தொடரின் லக்னோ அணியின் ஆலோசனையாள ராக உள்ளார். 41 வயதானாலும் பக்குவ மின்றி இன்னும் பள்ளி சிறுவர்களை போல அடிக்கடி எதாவது சர்ச்சையை கிளப்பி வரும் கம்பீர், 2013 ஐபிஎல் தொடரில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் கோலியுடனான பழைய பஞ்சா யத்தை 10 வருடங்களுக்கு பிறகு  மீண்டும் அரங்கேற்றி 2023 ஐபிஎல் தொட ரில் பெங்களூரு ரசிகர்களிடமும், கோலி யிடமும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஐபிஎல் தொடரின் அடுத்த சில ஆட்டங் களில் பெங்களூரு அணி ரசிகர்கள் கம்பீரை மைதானத்தில் சீண்ட கம்பீர் ஆபாச சைகையை காண்பித்து சர்ச்சை யை கிளப்பினார். ஆபாச சைகை  விவகாரம் கிரிக்கெட் ரசிகர்களி டையே கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில், ஒட்டுமொத்த கிரிக்கெட்  ரசிகர்கள் கோலிக்கு ஆதரவாகவும், கம்பீருக்கும் எதிராகவும் திரும்பி னர். கம்பீர் எந்த கிரிக்கெட் மைதானத் திற்கு சென்றாலும் கிரிக்கெட் ரசிகர்கள் கோலி என்று கத்துகின்றனர். கம்பீர் கோலி பெயரை உச்சரித்தாலே சினம் கொண்டு ரசிகர்களை நோக்கி மிரட்டும் நோக்கில் முறைக்கிறார்.

இலங்கையில் வறுபட்ட கம்பீர்

இலங்கையில் நடைபெற்று வரும் ஆசியக்கோப்பை கிரிக்கெட் தொடரின் 5-வது லீக் ஆட்டத்தில் இந்தியா - நேபா ளம் அணிகள் மோதின. இந்த ஆட்டத் தில் இந்தியா 10 விக்., வெற்றி பெற்ற நிலையில், போட்டியின் வர்ணனை யாளர் குழுவில் இடம்பிடித்திருந்த கம்பீர் வர்ணனை முடிந்த பின்பு மைதானத்தை விட்டு வெளியேறும் போது மைதானத்தில் குவிந்து இருந்த இந்திய ரசிகர்கள்  “விராட் கோலி”  மற்றும் “தோனி” என கோஷமிட்டனர். இதற்கு கம்பீர் ரசிகர்களை நோக்கி ஆபாச சைகை (நடுவிரல்) காண்பித் தார். இதற்கு ரசிகர்கள் மீண்டும் ஆக்ரோ ஷமாக கத்தி பதிலடி கொடுத்தனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படு த்திய நிலையில், ஆபாச சைகை விவ காரத்தில் கம்பீருக்கு கண்டனங்கள் குவிந்து வருகிறது.

உலகக்கோப்பை கிரிக்கெட் 2023

இந்திய அணி அறிவிப்பு

வீரர்கள் விபரம்
ரோகித் சர்மா (கேப்டன்), ஹர்திக் பாண்ட்யா (துணை கேப்டன்), விராட் கோலி, சப்மன் கில், ஷ்ரேயாஸ் ஐயர், 
சூர்யகுமார் யாதவ், கே.எல்.ராகுல் (விக்கெட் கீப்பர்), இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், அக்சர் படேல், குல்தீப் யாதவ், முகமது சிராஜ், ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி.

13-வது சீசன் உலகக்கோப்பை வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் இந்தியாவில் நடைபெறுகிறது. இந்த தொடருக்கான 15 வீரர்கள் கொண்ட பட்டியலை இந்திய அணி நிர்வாகம் செவ்வாயன்று அறிவித்தது.

அமெரிக்க ஓபன் டென்னிஸ்
4.41 மணிநேரம் போராடி வென்ற ஜுவரேவ்

கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் களில் ஒன்றான அமெரிக்கா ஓபன் டென்னிஸ் தொடரின் 143-வது சீசன் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடை பெற்று வருகிறது. இந்த தொடர் தற்போது நடுக்கட்டத்தை தாண்டியுள்ள நிலையில், ஆடவர் ஒற்றையர் பிரிவு 4-வது சுற்று ஆட்டத்தில் டென்னிஸ் உலகின் 12-ஆம் நிலை வீரரும், ஜெர்மனி நாட்டவருமான ஜுவரேவ், தரவரிசையில் 6-வது இடத்தில் உள்ள இத்தாலியின் சின்னரை எதிர் கொண்டார். 4.41 மணிநேரம் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 6-4, 3-6, 6-2, 4-6, 6-3 என்ற செட் கணக்கில் கடும் போராட்டத்து டன் ஜுவரேவ் காலிறுதிக்கு முன்னேறினார்.  ரஷ்யாவின் மெத்வதேவ் 2-6, 6-4, 6-1, 6-2 என்ற செட் கணக்கில் ஆஸ்திரேலி யாவின் டி மினாரை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார். ஜபியூர் அவுட் மகளிர் ஒற்றையர் பிரிவு 4-வது சுற்று  ஆட்டத்தில் டென்னிஸ் உலகின் 5-ஆம் நிலை வீராங்கனையான துனிசியாவின் ஜபியூர், தரவரிசையில் 23-வது இடத்தில்  உள்ள சீனாவின் ஜெங்கிடம் 6-2, 6-4 என்ற செட் கணக்கில் வீழ்ந்து தொடரிலி ருந்து வெளியேறினார். மற்றொரு 4-வது சுற்று ஆட்டத்தில் பெலாரஸ் வீராங்கனை சபலென்கா 6-1, 6-3 என்ற செட் கணக்கில் ரஷ்யாவின் கசட்கினாவை வீழ்த்தி காலி றுதிக்கு முன்னேறினார். 

ஆசியக்கோப்பை கிரிக்கெட் 2023
“சூப்பர் 4” சுற்றுகள் 
இன்று தொடக்கம்

16-வது சீசன் ஆசியக் கோப்பை கிரிக்கெட் (ஒருநாள்) தொடர் பாகிஸ்தான், இலங்கை நாடுகளில் கூட்டாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் லீக் ஆட்டங்கள் நிறைவு பெற்ற நிலையில், புதனன்று சூப்பர் 4 சுற்றுகள் தொடங்குகின்றன.