games

img

இங்கிலாந்து அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஜிம் பார்க்ஸ் காலமானார்

இங்கிலாந்து அணியின் முன்னாள் விக்கெட் கீப்பரும் சசெக்ஸ் (உள்ளூர் அணி) அணியின் நட்சத்திர வீரருமான ஜிம் பார்க்ஸ் (90) வீட்டில் இருக்கும் போதே தவறி விழுந்து வொர்திங் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 1930-ஆம் ஆண்டு பிறந்து சசெக்ஸ் அணிக்காக 18 வயதில்  தனது கிரிக்கெட் வாழ்க்கையை தொடங்கிய ஜிம் 739 முதல்தர ஆட்டங்களில் 36,673 ரன்கள் குவித்துள்ளார். இங்கிலாந்து தேசிய அணிக்காக 14 வருடங்கள் விளையாடியுள்ள ஜிம்  பார்க்ஸ் 46 டெஸ்ட் போட்டிகளில் 1,962 ரன்கள்எடுத்துள்ளார். இதில் 103 கேட்சுகள் அடங்கும். முதல்தர போட்டியில் 1,087 கேட்சுகள் பிடித்துள்ளார்.