games

img

அதானிக்கு எதிராக ஆஸ்திரேலியாவில் போராட்டம்.... இந்திய - ஆஸி. கிரிக்கெட்டின்போது பதாகைகளுடன் மைதானத்திற்குள் புகுந்தனர்

புதுதில்லி:
பிரதமர் மோடியின் மிக நெருக்கமான பெருமுதலாளி நண்பர்களில்ஒருவரான ‘அதானி குழும’த் தலைவர் கவுதம் அதானி, ஆஸ்திரேலியா வின் குயின்ஸ்லாந்தில் கார்மிகேல் என்ற இடத்தில் நிலக்கரி சுரங்கம் நடத்துவதற்கு எதிராக, அங்குள்ள மக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

சுற்றுச்சூழல் பாதிப்பைச் சுட்டிக்காட்டி இந்த போராட்டத்தை முன்னெடுத்துள்ள அவர்கள், ‘ஸ்டாப்அதானி’ என்ற இயக்கத்தையும் ஆரம்பித்து நடத்தி வருகின்றனர்.முன்னதாக ஆஸ்திரேலிய நீதிமன்றத்தையும் அவர்கள் நாடினர். ஆனால், அந்த நாட்டு நீதிமன்றமும் அதானி குழுமத்திற்கு சாதமாகவே தீர்ப்பு வழங்கியது. 1500 பேருக்கு வேலை கிடைக்கிறது என்ற காரணத்தை வைத்து, நிலக்கரிச் சுரங்கத்தை நடத்திக் கொள்ளலாம் என்று கூறிவிட்டது.இதனால், ஆளும் வர்க்கத்தின் மீது நம்பிக்கையிழந்த ‘ஸ்டாப் அதானி’ குழுவினர், தற்போது மக்கள்மன்றத்தில் தங்களின் போராட்டத் தைத் தொடர்ந்து வருகின்றனர். சுற்றுச்சூழலை அழிக்கும் அதானி குழுமத்தின் நிலக்கரிச் சுரங்கத்திற்கு ‘ஸ்டேட் பாங்க் இந்தியா’ வங்கி, ரூ. 1000 கோடி கடனுதவியை வழங்கக் கூடாது என்பது அவர்களின் முக்கியமான கோரிக்கைகளில் ஒன்றாக உள்ளது.

இந்நிலையில், தங்களின் இந்தக்கோரிக்கை மீது இந்திய - ஆஸ்திரேலிய மக்களின் கவனத்தை ஈர்க்க முடிவு செய்த ‘ஸ்டாப் அதானி’ குழுவினர், சிட்னியில் நடைபெற்ற இந்திய- ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட் போட்டியை ஒரு மேடையாக பயன்படுத்த முடிவு செய்தனர்.அதன்படி வெள்ளிக்கிழமை யன்று இரு நாடுகளுக்கு இடையே கிரிக்கெட் போட்டி நடைபெறும், சிட்னி விளையாட்டு மைதானத்திற்கு வெளியே பதாகைகளுடன் திரண்ட அவர்கள் அதானிக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். அப்போது போராட்டக்காரர்கள் இருவர் மைதானத்திற்குள்ளும் புகுந்தனர்.அதானியின் நிலக்கரிச் சுரங்கம் தடுக்கப்பட வேண்டும்; கார்மிகேலில் நிலக்கரி எடுக்கக் கூடாது என்றுஎழுதப்பட்டிருந்த டீ-சர்ட்டை அணிந்திருந்த அவர்கள், அதானிக்கு 1 பில்லியன் டாலர் கடனுதவியை ‘ஸ்டேட் பாங்க் இந்தியா’ வங்கி வழங்கக் கூடாது என்று எழுதப்பட்ட பதாகைகளையும் ஏந்தியபடி மைதானத்தை வலம் வந்தனர்.இதனால் கிரிக்கெட் மைதானத்தில் பரபரப்பு ஏற்பட்டது. 6-ஆவது ஓவரில் இந்தியா பந்து வீசிக் கொண்டிருந்தபோது, ஆட்டமும் சிறிது தடைப்பட்டது. 

பின்னர், பாதுகாப்பு ஊழியர்கள்படாதபாடுபட்டு, போராட்டக்காரர்கள் 2 பேரையும் வெளியேற்றினர். எனினும் அதானிக்கு எதிரான போராட்டத்தை வெற்றிகரமாக ‘ஸ்டாப் அதானி’ குழுவினர் நடத்தி முடித்துள்ளனர்.அதானியின் நாடு தாண்டிய லாபவேட்டையையும், அதற்கு எதிரான ஆஸ்திரேலிய மக்களின் கொதிப்பையும் உலக மக்களின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.

;