games

img

உலகக்கோப்பை கிரிக்கெட் இந்தியா 2023

மூன்றாம் உலகக்கோப்பை - 1983

1983இல் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் மண்ணில் கிரிக்கெட் உலகின் மூன்றாவது உலகக்கோப்பை கோலாகலமாக தொடங்கியது. “ஹாட்ரிக்” பட்டம் வெல்லும் முனைப்பில் மேற்கு இந்தியத் தீவுகள் மற்றும் இந்தியா, ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து, இங்கிலாந்து, பாகிஸ்தான், இலங்கை மற்றும் ஜிம்பாப்வே ஆகிய 8 அணிகள் பங்கேற்றன. முதல்  இரண்டு உலக்கோப்பையில் குரூப் சுற்றோடு வெளி யேறிய இந்திய அணி, 3-வது உலகக்கோப்பையில் கபில்தேவ் தலைமையில் மிகவும் கம்பீரமாக, மாறுபட்ட வலிமையுடன் களமிறங்கி அரையிறுதிக்கு முன்னேறியது. அரையிறுதியில் வலிமையான இங்கிலாந்து அணியை எளிதாக புரட்டியெடுத்த இந்திய அணி, இறுதியில் நடப்பு சாம்பியன் மேற்கு இந்தியத் தீவுகளை எதிர்கொண்டது.  இறுதி ஆட்டத்தில் மேற்கு இந்தியத் தீவுகள் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் இந்திய அணி 183 ரன்களில் சுருண்டது. மேற்கு இந்தியத் தீவுகள் அணி பலமான பேட்டிங் ஆர்டர் கொண்ட அணியாக இருப்பதால் மூன்றாம் முறையாக மேற்கு இந்தியத் தீவுகள் கோப்பையை வெல்லும் என எதிர்பார்க்கப்பட்டது.  ஆனால் மதன்லால் (3), மொஹிந்தர் அமர்நாத் (3), பல்விந்தர் சாந்து (2) ஆகியோரின் அபார பந்துவீச்சாலும், கேப்டன் கபில் தேவின் புத்திக்கூறுமையான வழிநடத்தலால் மேற்கு இந்தியத் தீவுகள் அணியை 140 ரன்களுக்குள் சுருட்டி,  43 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி முதல்முறை யாக உலகக்கோப்பையை கையில் எந்தியது. இந்த வரலாற்று சம்பவத்தை இனிப்பு மற்றும் பட்டாசுகளுடன் இந்தியர்கள் கொண்டாடினர்.  1983 ஜூன் 25 அன்று முதல் நாட்டின் மூலைமுடுக்கு எல்லாம் கிரிக்கெட் பாய்ச்சல் எடுப்பதற்கும், எதிர்கால தலைமுறை கிரிக்கெட் வீரர்கள் உத்வேகம் பெறுவதற்கும் இந்திய கிரிக்கெட்டுக்கு உண்மையிலேயே அது ஒரு வரலாற்று நாளாக அமைந்தது.