இந்தியாவில் நடைபெற்று வரும் 7-வது சீசன் மகளிர் உலகக் கோப்பை கால்பந்து (ஜூனியர் - யு 17) தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், விடுமுறை நாளான ஞாயிறன்று கோப்பைக் கான இறுதி ஆட்டத்தில் கொலம்பி யா - ஸ்பெயின் அணிகள் மோது கின்றன. 2-வது முறையாக கோப்பை யை கைப்பற்றும் முனைப்பில் ஸ்பெயின் அணியும், முதன் முறையாக மகுடம் சூடும் ஆசை யில் கொலம்பியா அணியும் என இரு அணிகளும் கோப்பையின் மீது குறியாக இருப்பதால் இறுதி ஆட்டம் மிகவும் பரபரப்பாக நடை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இறுதி ஆட்டத்திற்கு முன்னதாக அரையிறுதியில் தோல்விகண்ட நைஜீரியா - ஜெர்மனி ஆகிய அணிகள் மோதும் 3-வது இடத் திற்கான ஆட்டம் நடைபெறுகிறது. மகளிர் உலகக்கோப்பை கால்பந்து (ஜூனியர்) தொடரில் வடகொரியா அதிகபட்சமாக 2 முறை கோப்பையை வென்றுள் ளது என்பது குறிப்பிடத்தக்கது.
3-வது இடத்திற்கான ஆட்டம்
நைஜீரியா - ஜெர்மனி
நேரம் : மாலை 4:30 மணி
இறுதி ஆட்டம்
கொலம்பியா - ஸ்பெயின்
நேரம் : இரவு 8 மணி
இரண்டு ஆட்டங்களும் நவிமும்பையில் நடைபெறுகிறது.