games

img

விளையாட்டு...

சீன தைபே பேட்மிண்டன் காலிறுதியில் பிரனோய்

ஆசியாவின் முக்கிய பேட்மிண்டன் தொடர்களில் ஒன்றான சீன தைபே சர்வதேச பேட் மிண்டன் தொடரின் 40-வது சீசன் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டி யுள்ள நிலையில், ஆடவர் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்று ஆட்டத்தில் இந்தி யாவின் நட்சத்திர வீரர் பிரனோய் இந்தோனேசியா வீரர் சுகியர்டோவை எதிர்கொண்டார். தொடக்கம் முதலே பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் பிரனோய் 21-9, 21-17 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று  சீன தைபே பேட்மிண்டன் காலிறு திக்கு முன்னேறினார். ஒரே நாளில் 3 பிரிவில் இந்தியா அவுட் ஆடவர் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்று ஆட்டத்தில் அதிகம் எதிர்பார்த்த இந்திய வீரர் காஷ்யப், உள்ளூர் வீரர் (சீன தைபே) எல்.ஒய்.சுவிடம்  21-16, 21-17 என்ற செட் கணக்கில் வீழ்ந்து தொடரில் இருந்து வெளியேறினார்.  இதேபோல் மகளிர் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றில் தான்யா ஹேமந்த், கலப்பு இரட்டையர் பிரிவில் கபூர் - என்.எஸ்.ரெட்டி ஜோடி  என ஒரே நாளில் 3 பிரிவுகளில் இந்திய வீரர் - வீராங்கனைகள் வெளியேறினர்.

முகநூலில் இலவசமாக ஆஷஸ் தொடர் 
கடும் அதிர்ச்சியில் ஒளிபரப்பு நிறுவனங்கள்

73-வது சீசன் ஆஷஸ் தொடர் இங்கிலாந்து நாட்டில் நடைபெற்று வருகிறது. 5  போட்டிகளை கொண்ட இந்த டெஸ்ட் தொடரின் முதல் ஆட்ட த்தில் ஆஸ்திரேலியா அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற நிலையில், 2-வது  டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ்  மைதானத்தில் ஜுன் 28 அன்று தொடங்குகிறது. இந்த ஆஷஸ் தொடரை பல கோடி ரூபாய் செலவில் 10-க்கும் மேற்பட்ட தொலைக்காட்சி ஒளி பரப்பு நிறுவனங்கள் உலகம் முழு வதும் நேரடியாக ஒளிபரப்பி வரும் நிலையில்,  முதல் போட்டி இலவசமாக முகநூலில் வெளியாகியுள்ளது. அதுவும் ஒன்றல்ல, இரண்டல்ல 9-க்கும்  மேற்பட்ட போலி முகநூல் கணக்கின் மூலம் ஆஷஸ் தொடர் நேரடி ஒளிபரப்பாகியுள்ளது. பல  கோடி செலவு செய்து, முக நூலில் இலவசமாக ஆஷஸ் தொடர் ஒளிபரப்பானதால் ஒளிபரப்பு நிறுவனங்கள் கடும் அதிர்ச்சியில் உறைந்துள்ளன. 

ஸ்போர்ட்ஸ் கார்னர்

ஆஷஸ் தொடரின் முதல் ஆட்டம் ஸ்கை ஸ்போர்ட்ஸ் (இங்கிலாந்திற்கு சொந்த மானது) நிறுவனத்திடம் நேரடி ஒளிபரப்பை ஹேக் செய்து ஸ்போர்ட்ஸ் கார்னர் என்ற பெய ரில் போலி முகநூல் சேனல் கணக்கு மூலம் ஆஷஸ் தொடர் நேரடியாக ஒளிபரப்பானது. ஸ்போர்ட்ஸ் கார்னர் மூலம் 90  லட்சத்திற்கும் அதிகமான கிரிக்கெட் ரசிகர்கள் ஆஷஸ் தொடரை பார்த்துள்ளனர்.


ஆஷஸ்... நாடுகளும்...  ஒளிபரப்பு நிறுவனங்களும்... இந்தியா : சோனி ஸ்போர்ட்ஸ், சோனி லைவ்  ஆஸ்திரேலியா : சேனல் நைன், நவ் 9  அமெரிக்கா : வில்லோ எச்டி பிரிட்டன் : ஸ்கை ஸ்போர்ட்ஸ் கிரிக்கெட், ஸ்கை கோ மற்றும் நவ் கனடா : வில்லோ எச்டி தென் ஆப்பிரிக்கா: சூப்பர் ஸ்போர்ட் நியூசிலாந்து : ஸ்கை ஸ்போர்ட்ஸ் நியூசி., கரீபியன் : ப்ளோ ஸ்போர்ட்ஸ், ஸ்போர்ட்ஸ்மேக்ஸ், இஎஸ்பிஎன்+ ஆப்பிரிக்கா : ஒஎஸ்என் கிரிக்கெட், பெயின் ஸ்போர்ட்ஸ்

இப்படி ஒவ்வொரு கண்டத்திலும் ஒவ்வொரு ஒளிபரப்பு நிறுவனங்கள் ஆஷஸ் தொடரை நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது. ஆனால் முகநூலில் உலகம் முழுவதிலும் பொதுவாக, அதுவும் இலவசமாக ஒளிபரப்பு செய்வதால்தான் ஒளிபரப்பு நிறுவனங்கள் கடும் சிக்கலில் மாட்டிக்கொண்டு விழிக்கின்றன. முகநூலில் இலவசமாக ஒளிபரப்புவது மிகப்பெரிய பொருளாதார பின்னடைவை ஏற்படுத்தும் என்பதால் ஒளிபரப்பு நிறுவனங்கள் சோகத்தில் உள்ளன.

உலகக்கோப்பை தகுதி சுற்று (கிரிக்கெட்)
இன்றைய ஆட்டங்கள்
இலங்கை - ஓமன்
இடம் : குயின்ஸ்கிளப், புலவயோ
ஐக்கிய அரபு அமீரகம் - ஸ்காட்லாந்து
இடம் : அதெல்ட் கிளப், புலவயோ
இரண்டு ஆட்டங்களும் மதியம் 12:30 மணிக்கு தொடங்குகிறது...

டிஎன்பிஎல் 2023 : இன்று விடுமுறை

ஐபிஎல் தொடரை போன்று தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் 2016 முதல் டிஎன்பிஎல் என்ற பெயரில் ஆண்டுதோறும் டி-20 லீக் தொடரை நடத்தி வருகிறது. இந்த தொடரின் 6-வது சீசன் திங்களன்று தொடங்கியது. கோயமுத்தூர், திண்டுக்கல், சேலம், திருநெல்வேலி ஆகிய 4 மைதானங்களில் நடைபெறும் இந்த டிஎன்பிஎல் தொடரின் முதல் 6 லீக் ஆட்டங்கள் கோயமுத்தூர் எஸ்என்ஆர் மைதானத்தில் நடைபெற்றது. அதன்பிறகு திண்டுக்கல் என்பிஆர் மைதானத்தில் அடுத்த கட்ட, அதாவது 7 லீக் ஆட்டங்கள் நிறைவு பெற்ற நிலையில், 3-ஆம் கட்ட லீக் ஆட்டங்கள் சேலம் எஸ்சிஎப் மைதானத்தில் சனியன்று தொடங்குகிறது. வீரர்கள் இடம்பெயர்வு உள்ளிட்ட அனைத்து நிகழ்வுகளுக்காக வெள்ளியன்று டிஎன்பிஎல் தொடருக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.