games

img

செஞ்சுரியன் டெஸ்ட் இந்திய அணி நிதான தொடக்கம்

டெஸ்ட், ஒருநாள் போட்டிகளை கொண்ட தொடரில் பங்கேற்க  இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்கா வில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்த சுற்றுப்பயணத்தின் தொடக்க நிகழ்வான 3 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் ஆட்டம் ஞாயிறன்று தென் ஆப்பிரிக்காவின் முக்கிய நகரான செஞ்சுரியன் சூப்பர் ஸ்போர்ட் பார்க் மைதானத்தில் தொடங்கியது.  டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க வீரர்களாக கள மிறங்கிய கே.எல்.ராகுல் - மயாங் அகர்வால்  ஜோடி சிறப்பான தொடக்கத்தைகொடுத்தது. இந்த ஜோடியை கழற்ற தென் ஆப்பிரிக்க அணி கடுமையாக போராடியது. எனினும் மதிய உணவு இடைவெளி வரை ராகுல் (29) -  மயாங் (46) ஜோடியை பிரிக்க முடியவில்லை.  மதிய உணவு இடைவேளை (முதல் சீசன்) முடிவில் இந்தியா 28 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 83 ரன்கள் எடுத்திருந்தது.