games

img

இந்திய ஆடவர் கிரிக்கெட் அணியில் மீண்டும் கேப்டன் மாற்றம்

இங்கிலாந்துச் சுற்றுப்பயணம் நிறைவடைந்த பிறகு மேற்கு இந்தியத் தீவுகளுக்குச் சுற்றுப்பயணம் செய்யும் இந்திய அணி 3 ஒருநாள், 5 டி-20 போட்டிகளை கொண்ட தொடரில் விளை யாட உள்ளது. இந்த சுற்றுப்பயணத்தின் ஒருநாள்  தொடருக்கு மட்டும் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. கேப்ட னாக ஷிகர் தவன் அணியை வழிநடத்தி செல்லவுள்ளார். ஒருநாள் தொடர் ஜூலை 22 முதல் ஜூலை 27 வரை நிறைவடைகிறது.  தற்போது ஒருநாள், டி-20 தொடருக்கான கேப்டன் ரோஹித் சர்மா மேற்கு இந்தியத் தீவு களுக்குச் சுற்றுப்பயணத்தில் நீக்கப் பட்டுள்ளார். இந்திய ஆடவர் கிரிக்கெட் அணியில் ஒரே ஆண்டில் கேப்டனை மாற்றுவது இது 8-வது முறையாகும்.  இந்திய அணி விபரம்: ஷிகர் தவன் (கேப்டன்), ஜடேஜா (துணை கேப்டன்), ருதுராஜ் கெய்க் வாட், ஷுப்மன் கில், தீபக் ஹூடா, சூர்ய குமார், ஷ்ரேயஸ்,  இஷான் கிஷன், சஞ்சு  சாம்சன், ஷர்துல் தாக்குர், சஹால், அக்‌ஷர் படேல், ஆவேஷ் கான், பிரசித் கிருஷ்ணா, சிராஜ், அர்ஷ்தீப் சிங்.