தென் ஆப்பிரிக்க நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச கிரிக்கெட் அணி தற்போது ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. 3 போட்டிகளை கொண்ட ஒருநாள் தொடரின் முதல் ஆட்டம் சனியன்று செஞ்சுரியன் சூப்பர் பார்க் மைதானத்தில் தொடங்கியது. தொடக்கம் முதலே பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் வங்கதேச அணி 38 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று புதிய வரலாறு படைத்துள்ளது. அதாவது தென் ஆப்பிரிக்க சுற்றுப்பயணத்தில் வங்கதேச அணி சந்திக்கும் முதல் வெற்றி இதுவாகும்.
ஸ்கோர் கார்டு :
வங்கதேசம் : 314/7 (50 ஓவர்கள்)
தென் ஆப்பிரிக்கா : 276/10 (48.5 ஓவர்கள்)
ஆட்டநாயகன் : சாகிப் (வங்கதேசம்)
மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட்
சனியன்று நடைபெற்ற 18-வது லீக் ஆட்டத்தில் இந்திய அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலியா முதல் அணியாக அரையிறுதிக்கு முன்னேறியது.
இன்றைய ஆட்டம்
இங்கிலாந்து - நியூசிலாந்து
இடம் : ஈடன் பார்க், ஆக்லாந்து (நியூசி.,)
நேரம் : அதிகாலை (இந்திய நேரம்)