மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணியை 71 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றுள்ளது.
மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட்டின் இறுதிப்போட்டி கிறிஸ்ட்சர்ச்சில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 356 ரன்கள் எடுத்தது. இதில் தொடக்க வீராங்கனை அலீசா ஹீலி சதமடித்து 170 ரன்கள் எடுத்தார். ஹெய்ன்ஸ் 68 ரன்னிலும், பெத் மூனி 62 ரன்களிலும் ஆட்டமிழந்தார்.
இதையடுத்து 357 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி களமிறங்கியது. தொடக்க வீராங்கனையாக களமிறங்கிய டாம்மி பியூமான்ட் 27 ரன்களிலும் வ்யாட் 4 ரன்களில் வெளியேறினார். இதில் சிறப்பாக விளையாடிய நாட் சிவேர் சதம் அடித்து அசத்தினார்.
இறுதியில், இங்கிலாந்து 43.4 ஓவரில் 285 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆட்டமிழந்தது. நாட் சிவேர்148 ரன்கள் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இதனால் ஆஸ்திரேலிய அணி 71 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அத்துடன், உலக கோப்பையில் 7வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.