1996இல் நடைபெற்ற உலகக்கோப்பையில் இறுதிவரை முன்னேறிய ஆஸ்திரேலிய அணி இலங்கையிடம் கோப்பையை பறிகொடுத்தது. அப்பொழுது கேப்டனாக இருந்த மார்க் டெய்லர் அடுத்த ஒரு ஆண்டு
களில் கேப்டன் பதவியை துறந்தார். என்ன கோபமோ? இல்லை எந்தவிதத்தில் பயிற்சி பெற்றதோ தெரியவில்லை. ஆனால் அடுத்தடுத்து 3 முறை உலகக்கோப்பை யை வென்று ஆஸ்திரேலிய அணி வரலாறு படைத்தது. இதனை பற்றி விரிவாக காணலாம்:
1999
1998இல் ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக ஸ்டிவ் வாக் பொறுப்பேற்றார். 1999இல் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாடுகளில் நடைபெற்ற உலகக்கோப்பையில் “சூப்பர் 6” என்ற புதிய முறைசுற்று இந்த தொடரில் அறிமுகம் செய்யப்பட்டது. முன்னணி அணிகள் அனைத்தும் நன்றாக விளையாட அசாருதீன் தலைமையில் களமிறங்கிய இந்திய அணி “சூப்பர் 6” சுற்றோடு வெளியேறி சொதப்பியது. இறுதியில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி 2-வது முறையாக உலகக்கோப்பையை வென்றது ஆஸ்திரேலியா.
2003
ஸ்டிவ் வாக்கிற்கு பிறகு ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பொறுப்பு ரிக்கி பாண்டிங் கைக்கு மாறியது. இவரது தலைமையில் முன்னெப்பொழுதும் இல்லாத வகையில் மிக பிரம்மாண்ட பலத்துடன் உருவெடுத்த ஆஸ்திரேலிய அணி, 2003இல் தென் ஆப்பிரிக்கா, ஜிம்பாப்வே, கென்யா நாடுகளில் கூட்டாக நடைபெற்ற உலகக்கோப்பையில் கங்குலி தலைமையிலான இந்திய அணியை வீழ்த்தி அடுத்தடுத்து 2-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது. பந்துவீச்சு சொதப்பல் காரணமாக ஆஸ்திரேலிய அணியிடம் கோப்பையை பறிகொடுத்தது இந்தியா.
2007
மேற்கு இந்தியத் தீவுகள் நாட்டில் 2007இல் உலகக்கோப்பை நடைபெற்றது. இதுவரை நடைபெற்ற உலகக்கோப்பையிலேயே அதிகபட்ச அணிகள் (16) பங்கேற்ற உலகக்கோப்பை என்ற சிறப்பை பெற்ற 9-வது சீசனில், இந்தியா குரூப் சுற்றோடு வெளியேறியது. மழை சிக்கலுக்கு இடையே இலங்கை அணியை வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி சாம்பியன் பட்டம் வென்றது. 1999, 2003, 2007 என 3 முறை அடுத்தடுத்து கோப்பையை கைப்பற்றி, ஹாட்ரிக் சாதனையுடன் உலகக்கோப்பையை வென்ற கிரிக்கெட் அணி என்ற தலைசிறந்த வரலாற்றை ஆஸ்திரேலியா படைத்தது.