games

img

பெரோஷா கோட்லா மைதானத்தில் பாஜக தலைவருக்கு சிலையா? பிரபல கிரிக்கெட் வீரர் பிஷன் சிங் பேடி கடும் எதிர்ப்பு

புதுதில்லி:
மறைந்த பாஜக தலைவரும், மத்திய முன்னாள் நிதியமைச்சருமான அருண் ஜெட்லிக்கு, தில்லியிலுள்ள பெரோஷா கோட்லா கிரிக்கெட் மைதானத்தில், சிலைஅமைக்கும் முடிவுக்கு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் புகழ் பெற்ற சுழற்பந்து வீச்சாளருமான பிஷண் சிங் பேடி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.அருண் ஜெட்லி, 1999 முதல் 2013 ம்ஆண்டுவரை 14 ஆண்டுகள் தில்லி கிரிக்கெட்சங்கத்தின் தலைவராக இருந்துள்ளார் என்பதற்காக அவருக்கு சிலை அமைப்பதை ஏற்க முடியாது என்று தெரிவித்துள்ள பிஷண் சிங் பேடி, விளையாட்டுத் துறையில் விளையாட்டு வீரர்களுக்குத்தான் முக்கியத்துவம் அளிக்க வேண்டும், மாறாக, நிர்வாகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் செயலை வன்மையாக கண்டிப்பதாக தில்லிகிரிக்கெட் சங்கத் தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அருண் ஜெட்லி வகித்த தில்லி கிரிக்கெட் சங்கத் தலைவர் (DDCA) பதவியில் தற்போதுஅவரது மகன் ரோஹன் ஜெட்லிதான் இருக்கிறார். அவர்தான் தனக்குள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி, தனது தந்தைக்கு 6 அடி உயரச்சிலை வைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார்.ஆனால், இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளபிஷண்சிங் பேடி, அருண் ஜெட்லி சிலை அமைக்கும் பட்சத்தில், தில்லி கிரிக்கெட் சங்கத்தின் (Delhi and District Cricket Association - DDCA) உறுப்பினர் பதவியிலிருந்து தான் விலகிக் கொள்கிறேன் என்றும், அத்துடன், பெரோஷா கோட்லா மைதான பார்வையாளர் மாடத்தின் ஒருபகுதிக்கு சூட்டப்பட்டிருக்கும் தனது பெயரை நீக்கிவிடுமாறும் கடுமை காட்டியுள்ளார்.

;