ஆசியக் கோப்பை கிரிக்கெட்
இந்தியா - பாகிஸ்தான் இன்று பலப்பரீட்சை
17ஆவது சீசன் ஆசியக்கோப்பை கிரிக்கெட் போட்டி (டி-20) ஐக்கிய அரபு அமீரகத்தில் (துபாய் மற்றும் அபுதாபி) நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் 6ஆவது லீக் ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் (குரூப் ஏ) அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த ஆட்டம் விடுமுறை நாளான ஞாயி றன்று துபாய் சர்வதேச மைதானத்தில் நடை பெறுகிறது. கிரிக்கெட் உலகில் எலியும், பூனையுமாக உள்ள இந்தியா - பாகிஸ் தான் போட்டிக்கு மிகுந்த வரவேற்பு உள்ள நிலையில், ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு இடையே இந்த ஆட்டம் பரபரப்பாக நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஹாங்காங் ஓபன் பேட்மிண்டன் இறுதிக்கு முன்னேறிய இந்தியாவின் ராங்கி - சிராக் ஜோடி
ஹாங்காங்கின் முக்கிய நகரான ஹவ்லூனில் சர்வதேச பேட்மிண்டன் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் ஆடவர் இரட்டை யர் பிரிவு அரையிறுதி ஆட்டங்கள் சனிக்கிழமை அன்று நடை பெற்றன. இதில் 2ஆவது அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா வின் ராங்கி - சிராக் ஜோடி, சீன தைபேவின் லின் - சென் ஜோடியை எதிர்கொண்டது. தொடக்கப் புள்ளிகள் முதலே அதிரடியாக விளையாடிய ராங்கி - சிராக் ஜோடி 21-17, 21-15 என்ற செட் கணக்கில் அபார வெற்றி பெற்று இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது. விடுமுறை நாளான ஞாயிறன்று இந்திய நேரப்படி 3:30 மணி அளவில் நடைபெறவுள்ள இறுதி ஆட்டத்தில் சீன வீரர்கள் லியாங் - வாங் ஜோடியை எதிர்கொள்கிறது இந்தியாவின் ராங்கி - சிராக் ஜோடி.
120 பந்துகளில் 300 ரன்கள் இங்கிலாந்து அணி சாதனை'
வெள்ளிக்கிழமையன்று மான்செஸ்டர் நகரில் (இங்கிலாந்து) நடைபெற்ற தென் ஆப்பிரிக்கா அணிக்கெதிரான 2ஆவது டி-20 லீக் ஆட்டத்தில் முதல் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 20 ஓவர்களில் 314 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக பில் சால்ட் 60 பந்துகளில் 141 ரன்கள் குவித்தார். பின்னர் களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணி 16.1 ஓவர்களில் 158 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. இந்நிலையில், 146 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி சர்வதேச டி-20 கிரிக்கெட்டில் புதிய சாதனை படைத்துள்ளது. அதாவது சர்வதேச டி-20 கிரிக்கெட் போட்டியில் பலம் வாய்ந்த நட்சத்திர அணிகளுக்கு எதிரான ஆட்டத்தில் 300 ரன்கள் குவித்த அணி என்ற பெருமையை இங்கிலாந்து பெற்றுள்ளது. எனினும் ஒட்டுமொத்த சாதனையில் ஜிம்பாப்வே அணி முதலிடத்தில் உள்ளது. 2024ஆம் ஆண்டு ஜிம்பாப்வே அணி காம்பியா அணிக்கெதிராக 344 ரன்கள் குவித்ததே உலக சாதனையாக உள்ளது. இந்த சாதனைப் பட்டியலில் நேபாளம் அணி 2ஆவது இடத்தில் (314 - மங்கோலியா, 2023) உள்ள நிலையில், இங்கிலாந்து அணி 3ஆவது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.