ஆசியக்கோப்பை கிரிக்கெட் 2023 : 2 நாட்கள் விடுமுறை
16-வது சீசன் ஆசியக்கோப்பை கிரிக்கெட் தொடர் பாகிஸ்தான், இலங்கை நாட்டில் கூட்டாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் தற்போது “சூப்பர் 4 சுற்று” ஆட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், வியாழன், வெள்ளி என இரண்டு நாட்கள் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து சனியன்று “சூப்பர் 4” சுற்றின் 2-வது ஆட்டம் நடைபெறும்.
அமெரிக்க ஓபன் டென்னிஸ்
இறுதிக்கு முன்னேறுமா போபண்ணா ஜோடி?
கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர்களில் ஒன்றான அமெரிக்கா ஓபன் டென்னிஸ் தொடரின் 143-வது சீசன் அமெரிக்காவின் நியூ யார்க் நகரில் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஆட வர் இரட்டையர் பிரிவில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் இந்தியாவின் ரோஹன் போபண்ணா, பிரிட்டனின் மேத்யூ எப்டன் ஜோடி தனது காலிறுதி ஆட்டத்தில் அமெ ரிக்காவின் லம்மோன்ஸ் - ஜாக்சன் ஜோடியை 7-6 (12-10), 6-1 என்ற செட் கணக்கில் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது. வியாழனன்று நடை பெறும் அரையிறுதி ஆட்டத்தில் பிரான்சின் மஹூத் - ஹெர்பெர்ட் ஜோடி யை போபண்ணா - எப்டன் ஜோடி எதிர்கொள்கிறது. தியாபோ அவுட் மகளிர் ஒற்றையர் பிரிவு காலிறுதி ஆட்டத்தில் தரவரிசையில் 10-வது இடத்தில் உள்ள அமெரிக்காவின் தியாபோ தரவரிசையில் இல்லாத சக நாட்டு வீரரான ஷெல்டனை எதிர் கொண்டார். தொடக்கம் முதலே பரபரப் பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஷெல்டன் 6-2, 3-6, 7-6 (9-7), 6-2 என்ற செட் கணக்கில் தியாபோவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார். மகளிர் ஒற்றையர் பிரிவு காலிறுதி ஆட்டத்தில் செக்குடியரசின் முசோவா 6-0, 6-3 என்ற செட் கணக்கில் கிறிஸ்டியாவை பந்தாடி அரையிறுதிக்கு முன்னேறினார்.
உலகக்கோப்பை கிரிக்கெட் 2023 : ஆஸி., அணி அறிவிப்பு
13-வது சீசன் உலகக்கோப்பை வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் இந்தி யாவில் நடைபெறுகிறது. இந்த தொடருக்கான 15 வீரர்கள் கொண்ட பட்டியலை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் புதனன்று அறிவித்தது. வீரர்கள் விபரம் : பேட் கம்மின்ஸ் (கேப்டன்), ஸ்டீவ் ஸ்மித் (துணை கேப்டன்), டேவிட் வார்னர், கேமரூன் க்ரீன், டிராவிஸ் ஹெட், மார்கஸ் ஸ்டோய்னிஸ், மேக்ஸ்வெல், மிட்செல் மார்ஷ், அலேக்ஸ் கேரி, ஜோஸ் இங்கிலிஸ், மிட்செல் ஸ்டார்க், சீன் அப்போட், அஸ்டோன் அகர், ஜோஷ் ஹாசில்வுட், ஆடம் ஜம்பா.
தெரிந்துகொள்ளுங்கள்
விளையாட்டு உலகில் ஆஸ்திரேலியா நாடு சற்று மாறுபட்டது. காரணம் உலகில் உள்ள பெரும்பாலான நாடுகள் மற்ற நாடுளை கண்டு பேராசையால் அந்த நாடு விளையாடும் விளையாட்டுகளை கண்டு தமக்கு தெரியாத விளையாட்டுகளில் ஆர்வம் செலுத்தி தீவிர முயற்சிக்கு பின் உலகளவு தொடர்களில் கால்பதிக்கும். ஆனால் ஆஸ்திரேலியா நாடு அப்படியில்லை. மற்ற நாடுகளை கண்டு பேராசையுடன் எந்த விளையாட்டிலும் கால்பதிக்காது. தனக்கு எந்த விளையாட்டு தெரியுமோ அந்த விளையாட்டில் உலகலளவில் ஆதிக்கம் செலுத்தும். தேவையில்லாமல் எந்த விளையாட்டிலும் பெயரளவுக்கு ஆஸ்திரேலிய நாடு விளையாடாது. ஆஸ்திரேலியா நாடு தடகளம், நீச்சல், ஹாக்கி, கிரிக்கெட், கால்பந்து, ரக்பி, டென்னிஸ் ஆகிய விளையாட்டுகளில் உலகளவில் பலம்வாய்ந்த நாடாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆஸ்திரேலியாவின் ஆர்வம்