games

img

ஒரே ஆண்டில் 8 இந்திய கேப்டன்கள்!  

கடந்த ஜூலை 2021 முதல் தற்போது வரை பல்வேறு சூழ்நிலை காரணமாக 8 கேப்டன்கள் இந்திய அணியை வழிநடத்தி சென்றுள்ளனர்.  

இந்திய அணியின் 3 வகை போட்டிக்கு கேப்டனாக இருந்த கோலிக்கு அடுத்ததாக இந்திய டெஸ்ட், ஒருநாள், டி20 அணிகளின் கேப்டனாக ரோஹித் சர்மா நியமிக்கப்பட்டார். தற்போது ரோகித் சர்மாவுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால் இங்கிலாந்து அணிக்கு எதிரான 5வது டெஸ்ட் போட்டியின் கேப்டனாக இந்திய அணியின் வேகபந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவை கேப்டனாக பிசிசிஐ அறிவித்துள்ளது. இதன்மூலம் கடந்த ஜூலை 2021 முதல் தற்போது வரை ஓய்வு, காயம், கொரோனா என பல்வேறு சூழ்நிலை காரணமாக ஷிகர், விராட்கோலி, ரோஹித் சர்மா, ரஹானே, கே.எல்.ராகுல், ரிஷப் பந்த், பாண்டியா மற்றும் பும்ரா ஆகிய 8 கேப்டன்கள் இந்திய அணியை வழிநடத்தி சென்றுள்ளனர்.        

ஜூலை 2021 முதல் இந்திய அணியின் கேப்டன்கள்: 

ஷிகர் தவன்-3ஒருநாள்

3 டி20 விராட் கோலி - 7 டெஸ்டுகள்

5 டி20 ரோஹித் சர்மா - 2 டெஸ்டுகள்

3 ஒருநாள், 9 டி20 ரஹானே - 1 டெஸ்ட்

கே.எல். ராகுல் -  1 டெஸ்ட், 3 ஒருநாள்

ரிஷப் பந்த் - 5 டி20

பாண்டியா - 2 டி20

பும்ரா - 1 டெஸ்ட்

;