games

img

உலகக்கோப்பை கிரிக்கெட் இந்தியா 2023

சத்தமில்லாமல் சாதித்த இலங்கை

6-ஆவது உலகக்கோப்பை 1996 பிப்ரவரி மாதம் இந்தியா (17 ஆட்டங்கள்), பாகிஸ்தான் (16 ஆட்டங்கள்), இலங்கை (4 ஆட்டங்கள்) இலங்கை மண்ணில் கூட்டாக நடைபெற்றது.  இந்தியா, மேற்கு இந்தியத் தீவுகள், ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், இங்கிலாந்து, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, இலங்கை, ஜிம்பாப்வே, நெதர்லாந்து, கென்யா, ஐக்கிய அரபு அமீரகம் என அணிகளின் எண்ணிக்கை 12 ஆக உயர்த்தப்பட்டு, அணிகள் இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டு காலிறுதி, அரையிறுதி என சுற்று வரிசை மாற்றம் செய்யப்பட்டன.  சிறிய அணிகளான ஜிம்பாப்வே, நெதர்லாந்து, கென்யா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய அணிகள் குரூப் சுற்றோடு வெளியேறியது. நடப்பு சாம்பியன் பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து அணிகள் காலிறுதியுடன் வெளியேறின. முன்னாள் சாம்பியன்களான அசாருதீன் தலைமையில் களமிறங்கிய இந்தியா, மேற்கு இந்தியத் தீவுகள், ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் வலுவான ஆட்டத்துடன் அரையிறுதிக்கு முன்னேறின.  கடந்த 5ஆவது உலகக்கோப்பை சீசனில் சிறிய அணியாக இருந்த இலங்கை அணி, 6-ஆவது உலகக்கோப்பையில் அர்ஜுன ரணதுங்கா தலைமையில் சத்தமில்லாமல் மிகவும் வலுவான அணியாக களமிறங்கி அரையிறுதிக்கு தகுதி பெற்றது மட்டுமல்லாமல், அரையிறுதியில் வலுவான இந்திய அணியை எளிதாக வீழ்த்தி இறுதிக்கு முன்னேறி கிரிக்கெட் உலகில் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியது. மேற்கு இந்தியத் தீவுகள் அணி ஆஸ்திரேலியாவிடம் வீழ்ந்து வெளியேறியது. மார்ச் 17 அன்று நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா - இலங்கை அணிகள் மோதின. மிகவும் பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இலங்கை அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வெற்றி பெற்று எளிதாக உலகக்கோப்பையை கையில் ஏந்தியது.