games

img

விளையாட்டு

ஆசியக் கோப்பை கிரிக்கெட்  இந்தியா - பாகிஸ்தான் இன்று பலப்பரீட்சை

17ஆவது சீசன் ஆசியக்கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. தற்போது இந்த தொடரில் “சூப்பர் 4” சுற்று ஆட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், விடுமுறை நாளான ஞாயிறன்று நடைபெறும் “சூப்பர் 4” சுற்று ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. “சூப்பர் 4” சுற்று ஆட்டத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி இறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை பிரகாசமாக்கும் முயற்சியில் இந்திய அணியும், குரூப் சுற்றில் ஏற்பட்ட தோல்விக்கு பதிலடி கொடுக்கும் முனைப்பில் பாகிஸ்தான் அணியும் என இரு அணிகளும் வெற்றியின் மீது குறியாக களமிறங்குவதால் இந்த ஆட்டம் பரபரப்பாக நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியா - பாகிஸ்தான்

இடம் : துபாய் சர்வதேச மைதானம் நேரம் : இரவு 8 மணி சேனல் : சோனி ஸ்போர்ட்ஸ், சோனி லைவ் (ஓடிடி)

அபாயகரமான காயத்தில் சிக்கி தவிக்கும் நீரஜ் சோப்ரா, பும்ரா கவலையில் இந்திய விளையாட்டு உலகம்

தடகள உலகின் நட் சத்திர வீரரும், ஒலிம் பிக் பதக்க நாயகனுமான நீரஜ் சோப்ரா (ஈட்டி எறிதல்) சமீபத்தில் ஜப்பானின் டோக்கியோ நகரில் நடை பெற்ற உலக தடகள சாம்பி யன்ஷிப் போட்டியில் 8 ஆவது இடத்தை பிடித்து சொதப்பினார். கடந்த 8  ஆண்டுகளாக ஒலிம்பிக், டைமண்ட் உள்ளிட தொடர் களில் பதக்கவேட்டை நிகழ்த்தி வரும் நீரஜ் சோப் ராவின் இந்த திடீர் சொதப்பல் பெரும் அதிர்ச்சி யை  ஏற்படுத்தியது. போட்டி முடிந்த பின்பு தனக்கு முதுகு வலி (காயம்) பிரச்சனை இருப்பதாக நீரஜ் சோப்ரா கூறினார். இது ரசிகர்களி டையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. விளையாட்டு உலகில் காயம் என்பது சகஜமானது தான். ஆனால் முதுகு பகுதி காயம் என்பது, மோசமான காயங்களில் ஒன்று ஆகும்.  மிக முக்கியமாக காயம் ஏற்படும் போது அல்லது ஏற்பட்ட பின்பு தொடர் அழுத்தத்தினால் முதுகு எலும்பில் நரம்பு நைந்து போனால் கை, கால் செய லிழப்பை கூட ஏற்படுத்தும். இதனால் சரியான சிகிச்சை, ஓய்வு, பலனளிக்கும் உடற் பயிற்சி செய்யவில்லை என் றால் முதுகு பகுதி காயம்  மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தும்.  பும்ரா எடுத்துக்காட்டு நீரஜ் சோப்ராவைப் போல கிரிக்கெட் உலகின் நட்சத்திர வீரர் பும்ராவும் நாள்பட்ட முதுகு காயத்து டன் கடும் சிரமத்துக்கு இடையே பந்து வீசி வரு கிறார். அவர் 5 போட்டிகளில் தொடர்ச்சியாக விளையாட முடியாத சூழல் உள் ளது. தற்போதைய சூழ்நிலை யில் பும்ரா  ஒரு போட்டியில் களம், ஒரு போட்டியில் ஓய்வு என 5 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் அல்லது ஒருநாள் தொடரில், 2 அல் லது 3 போட்டிகளில் மட்டுமே விளையாடி வருகிறார். பும்ராவுக்கு முதுகு காயம் தீவிரமடைந்தால் அவர் பின்னாளில் விளையாட்டை விட்டு வெளியேறும் சூழல் ஏற்படும் என ஐபிஎல் மும்பை  அணியின் பயிற்சியாளர் ஒரு வர் ஏற்கெனவே கூறி இருந் தார். தடகளத்தில் நீரஜ் சோப்ரா இருந்தால் பதக்க நம்பிக்கை நம் நாட்டு மக்க ளுக்கு உண்டு. அதே போல பும்ரா களத்தில் இருந் தால் கண்டிப்பாக பந்து வீச்சில் இந்திய அணி சாத னையுடன் வெற்றி பெறும் என்ற நம்பிக்கையும் கிரிக் கெட் ரசிகர்களுக்கு உண்டு. இத்தகைய சூழலில் இரு வரும் அபாயகரமான முதுகு பகுதி  காயத்தால் அவதிப் படுவது இந்திய விளை யாட்டு உலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.