games

img

உலகக் கோப்பை கால்பந்து போட்டி - ஜெர்மன் அணி தகுதி சுற்றுக்குத் தேர்வு

உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்கு முதல் அணியாக ஜெர்மனி தகுதி பெற்றுள்ளது.

32 அணிகள் இடையிலான 22-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி அடுத்த ஆண்டு நவம்பர், டிசம்பர் மாதங்களில் கத்தாரில் நடைபெறுகிறது. இதில் போட்டியை நடத்தும் கத்தார் தவிர மற்ற 31 அணிகளும் தகுதி சுற்று மூலமே தேர்வாகும். 

இதையொட்டி கண்டங்களுக்கு இடையிலான தகுதி சுற்றுப் போட்டிகள் பல்வேறு நாடுகளில் நடந்து வருகிறது. இதில் ஐரோப்பியக் கண்டத்துக்கு மொத்தம் 13 இடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளன. ஐரோப்பியக் கண்டத்துக்கான தகுதி சுற்றில் மொத்தம் 55 அணிகள் 10 பிரிவாகப் பிரிக்கப்பட்டு லீக்கில் மோதி வருகின்றன. இவற்றிலிருந்து 13 அணிகள் உலக போட்டிக்குத் தகுதி பெறும். 

இதில் ‘ஜெ’ பிரிவில் 6 அணிகளில் ஒன்றாக அங்கம் வகிக்கும் ஜெர்மனி அணி நேற்று முன்தினம் இரவு நடந்த ஒரு லீக் ஆட்டத்தில் 4-0 என்ற கோல் கணக்கில் உள்ளூர் அணியான வடக்கு மாசிடோனியாவை தோற்கடித்தது முந்தைய தோல்விக்குப் பழிதீர்த்தது. 

மற்ற ஆட்டங்களில் ருமேனியா 1-0 என்ற கோல் கணக்கில் அர்மேனியாவையும், ஐஸ்லாந்து 4-0 என்ற கோல் கணக்கில் லீச்டென்ஸ்டீனையும் தோற்கடித்தது.

முன்னாள் சாம்பியனான ஜெர்மனி அணி இதுவரை 8 ஆட்டங்களில் விளையாடி 7 வெற்றி, ஒரு தோல்வி என்று 21 புள்ளிகளுடன் 2022 ஆம் ஆண்டு உலகக் கோப்பை போட்டிக்கு முதல் அணியாகத் தகுதி  பெற்றுள்ளது. இன்னும் 2 ஆட்டம் எஞ்சியிருந்தாலும் ஜெர்மனியின் முதலிடத்துக்கு ஆபத்து இல்லை. 

 

;