கத்தாரில் நடைபெற்றுவரும் 23வது ஆசிய தடகள விளையாட்டு போட்டியில் 2 வெள்ளிப்பதக்கங்கள் உள்பட 5 பதக்கங்கள் இந்தியா வென்றுள்ளது.
23வது ஆசிய தடகள விளையாட்டுப் போட்டிகளின் துவக்க விழா நேற்று கத்தார் நாட்டின் தலைநகர் தோகாவில் நடைபெற்றது. உலகம் முழுவதும் இருந்து மொத்தம் 63 நாடுகள் பங்கேற்கும் இந்த தடகள போட்டிகள் நான்கு நாள் நடைபெறவுள்ளன. முதல் நாளான இன்று இந்தியா 2 வெள்ளி உள்பட 5 பதக்கங்களை வென்றுள்ளது.
இன்று நடைபெற்ற பெண்கள் ஈட்டி எறிதல் போட்டியில் இந்திய வீராங்கனை அன்னு ராணி வெள்ளி பதக்கத்தை வென்று இந்தியாவின் பதக்கப் பட்டியலை துவங்கினார். அதைத்தொடர்ந்து 3000 மீட்டர் தடை தாண்டும் ஓட்டப்போட்டியில் வெள்ளிப்பதக்கத்தை வென்றார். அதைத்தொடர்ந்து, இந்தியாவின் பரூல் சௌத்ரி 5000மீட்டர் ஓட்டப்போட்டியிலும், எம்.ஆர்.பூவம்மா 400மீ ஓட்டப்போட்டியிலும் மற்றும் கவித் முரளிகுமார் 10 ஆயிரம் மீட்டர் ஓட்டப்போட்டியிலும் வெண்கலப்பதக்கங்களை வென்றனர்.
இதன்மூலம் முதல்நாள் ஆட்டநேர முடிவில் இந்தியா பதக்கப்பட்டியலில் 5 பதக்கங்களுடன் 5ம் இடத்தில் உள்ளது.