games

img

மகளிர் உலகக்கோப்பை கால்பந்து 2023

மகுடம் சூடப்போவது யார்? 
ஸ்பெயின் - இங்கிலாந்து இன்று பலப்பரீட்சை

மகளிருக்கான உலகக்கோப்பை கால்பந்து 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் 9-வது சீசன் முதல் முறையாக ஓசியானியா கண்டத்தின் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து நாடுகளில் கடந்த ஜூலை 20 அன்று தொடங்கியது. 6 கண்டங்களில் இருந்து மொத்தம் 32 நாடுகள் பங்கேற்ற இந்த தொடரின் இறுதி ஆட்டம் விடுமுறை நாளான ஞாயிறன்று நடைபெறுகிறது. இறுதி ஆட்டத்தில் ஸ்பெயின் - இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன.

ஸ்பெயின் - இங்கிலாந்து
வெற்றி வாய்ப்பு 

நேரம் : மதியம் 3:30 மணி
இடம் : ஸ்டேடியம் ஆஸ்திரேலியா, சிட்னி நகரம்.
சேனல் : தூர்தர்சன் ஸ்போர்ட்ஸ், பேன் கோடு (ஒடிடி)

பரிசுத்தொகை
சாம்பியன் பட்டம்
ரூ. 35 கோடி (கோப்பை, பதக்கங்களுடன்)
இரண்டாம் இடம்
ரூ.25 கோடி (பதக்கம்)
இதுபோக மூன்றாம் இடம், காலிறுதி, நாக் அவுட், லீக் சுற்றில் வெளியேறும் அணிகளுக்கு குறிப்பிட்ட பரிசுத்தொகை உண்டு.

யாருக்கு கோப்பை?

உலகக்கோப்பை இறுதி ஆட்டத்தில் எந்த அணிக்கு கோப்பை  வெல்லும் என திடமாக கருத்துக் கூற முடியாது என்றாலும், ஸ்பெயின் அணிக்கு சற்று கூடுதல் சாதக சூழல் இருப்பதாக எளிதாக கூறலாம். காரணம் ஆடவர் கால்பந்து அணியை போல ஸ்பெயின் கோலடிப்பதில் ஆதிக்கம் செலுத்தி, கோலடிப்பின் தடுப்பாட்டத்தில் தடுப்பு அரண் அமைத்து விளையாடும் ஆட்டமுறையை கொண்டது. மேலும் ஸ்பெயின் வீராங்கனைகள் அதிரடி ஆட்டத்தை 90 நிமிடம் வரை தேர்ந்தெடுத்து தாக்குதல் தொடுக்கும் மனநிலை கொண்டவர்கள். இது கால்பந்து உலகில் சற்று சிக்கலான ஆட்டமுறை என்பதாலும், கோல், தடுப்பாட்டம் இரண்டையும் ஒரே நேரத்தில் விளையாடும் ஆட்டமுறை கொண்ட இங்கிலாந்து அணி ஸ்பெயினை சமாளிக்குமா என்ற பலத்த சந்தேகம் உள்ளது. பின்களம், நடுகளம், முன்களம் என மூன்றிலும் மிகவும் பலமான நிலையில் உள்ள இங்கிலாந்து அணி தடுப்பாட்டத்தில் லேசான அளவில் சொதப்புகிறது. அந்நாட்டு வீராங்கனைகளில் கோல் கீப்பர் மட்டுமே சுறுசுறுப்பாக உள்ளார். மற்ற வீராங்கனைகள் மந்தமாகவே உள்ளனர். இதனை மாற்றி விளையாடினால் இங்கிலாந்து அணி எளிதாக கோப்பையை வெல்லும் வாய்ப்புள்ளது. இரு அணிகளும் முதல்முறையாக கோப்பை வெல்லும் முனைப்பில் களமிறங்குவதால் இறுதி ஆட்டம் மிகுந்த  பரபரப்பாக நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

ஸ்வீடன் அணிக்கு மூன்றாவது இடம்

அரையிறுதியில் தோல்வி கண்ட ஸ்வீடன் - ஆஸ்திரேலியா அணிகள் சனியன்று மூன்றாவது இடத்திற்கான ஆட்டத்தில் மோதின. தொடக்கம் முதலே பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஸ்வீடன் அணி 2-0 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி 4-வது முறையாக 3-வது இடத்தை பிடித்துள்ளது. மூன்றாவது இடம்பிடித்த ஸ்வீடன் அணி ரூ. 21 கோடியும், 4-வது இடம்பிடித்த ஆஸ்திரேலியா அணி ரூ.20 கோடி பரிசுத்தொகையும் வென்றன.