games

img

மான்செஸ்டர் யுனைடெட்டை விட்டு வெளியேறுகிறார் பால் போக்பா

பிரான்ஸ் கால்பந்து அணியின் முன்னணி வீரரும், பிரிட்டன் கிளப் அணியான மான்செஸ்டர் யுனைடெட் நட்சத்திர வீரருமான பால் போக்பா (29) மான்செஸ்டர் யுனைடெட்டை விட்டு வெளியேறுகிறார்.  இத்தாலிய அணியான ஜுவென்டஸ் அணியில் 4 ஆண்டுகளுக்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார் போக்பா. கடந்த 2016-ஆம் ஆண்டு 89 மில்லியன் பவுண்டுகள் மதிப்பில் (846 கோடி ரூபாய்) போக்பாவை மான்செஸ்டர் யுனைடெட் வாங்கியது. மான்செஸ்டர் யுனைடெட் அணி போக்பாவை வாங்கிய ஒப்பந்த தொகை அந்த காலகட்டத்தில்  உலகசாதனையாக இருந்தது.