48ஆவது சீசன் கோபா அமெரிக்கா தொடர் அமெரி க்காவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஜூலை 15 அன்று காலை இறுதி ஆட்டம் நடைபெறுகிறது. இந்த இறுதி ஆட்டத்தில் அர்ஜெண்டினா - கொலம்பி யா அணிகள் மோதுகின்றன.
இந்நிலையில், கோபா அமெரிக்கா தொடரின் மைதான ஏற்பாட்டில் பெரியளவு சர்ச்சை ஏற்பட்டுள்ளது. மைதான பிட்ச் நல்ல நிலையில் இருந் தாலும், புற்கள் வளர்ச்சிக்காக அதிக தண்ணீர் ஊற்றப்படுவதால் குளம் போல் காணப்படும் நிலையில், வீரர்கள் ஓடுவதற்கு சிரமப்படுகிறார்கள்.
3 நாட்களுக்கு முன் நடைபெற்ற அர்ஜெண்டினா - கனடா அணிகள் மோதிய அரையிறுதி ஆட்டம் நியூ கரோலினா மாகாணத்தில் உள்ள பேங்க் ஆப் அமெரிக்கா மைதானத்தில் நடைபெற்றது. இந்த மைதானத்தில் அதிகளவு தண்ணீர் தேங்கி நின்றதால் இரு நாட்டு வீரர்களும் அடிக்கடி சறுக்கி கீழே விழுந்தனர். வேண்டுமென்றே தடுக்கி தங்களை எதிரணி வீரர்கள் கீழே சாய்த்ததாக அர்ஜெண்டினா - கனடா வீரர்கள் மோதலில் ஈடுபட்டனர். போதுமான வடி கால் பிரச்சனை இல்லாததால் இந்த நிலைமை ஏற்பட்டதாக மைதான நிர்வாகம் தகவல் தெரிவித்தாலும், அமெரிக்காவிற்கு விளையாட்டு மைதானங்களை உருவாக்க, பராமரிக்க தெரியவில்லை என விமர்சனங்கள் எழுந்துள்ளன. காரணம் சமீபத்தில் நிறைவு பெற்ற 9ஆவது சீசன் உலகக்கோப்பை டி-20 கிரிக்கெட் தொடரின் ஒரு சில ஆட்டங் கள் அமெரிக்காவில் நடைபெற்றது.
மைதான பிட்ச் படுமோசமாக இருந்ததால் ரன் குவிக்க முடியாத சூழல் ஏற்பட்டது. அனைத்து நாட்டு வீரர்களும் அமெரிக்காவின் பிட்ச் தன்மைக்கு கடும் கண்டனம் தெரிவித்த னர். அதே போல கோபா அமெரிக்கா தொடரில் விளையாடிய நாடுகளும் மைதானம் சரியில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைத்துள்ளன. இதனால் அமெரிக்கா கடும் சங்கடத்திற்கு உள்ளாகியுள்ளது.
விம்பிள்டன் கோப்பை யாருக்கு?
இன்று மகளிர் பிரிவு இறுதி ஆட்டம்
கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரில் முதன்மையான தொடராக இருக்கும் விம்பிள்டன் தொடரின் 147ஆவது சீசன் இங்கிலாந்து தலைநகர் லண்ட னில் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், வியாழனன்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவிற்கான அரையிறுதி ஆட்டத்தின் முடிவில் கெர்ஜிசிகோவா (செக்குடியரசு) - பவோலினி (இத்தாலி) ஆகியோர் இறுதிச் சுற்றுக்கு முன்னேறினர்.
இந்நிலையில், இறுதி ஆட்டம் சனியன்று மாலை நடை பெறுகிறது. 2ஆவது முறையாக விம்பிள்டன் பட்டத்தை கைப்பற்றும் முனைப்பில் கெர்ஜிசிகோவாவும், முதன்முறை யாக விம்பிள்டன் மூலம் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வெல்லும் முனைப்பில் பவோலினியும் கோப்பை மீது குறியாக களமிறங்குவதால் இந்த ஆட்டம் பரபரப்பாக நடைபெறுகிறது. கெர்ஜிசிகோவா கடந்த 2021இல் விம்பிள்டன் கோப்பையை கைப்பற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
சாம்பியன்ஷிப் போட்டிகள்
ஸ்பெயின் - இங்கிலாந்து
நேரம் : ஞாயிறன்று நள்ளிரவு 12:30 மணி
இடம் : பெர்லின், ஜெர்மனி
சேனல் : சோனி ஸ்போர்ட்ஸ் டென், சோனி லைவ் (ஒடிடி)
அர்ஜெண்டினா - கொலம்பியா
நேரம் : திங்களன்று அதிகாலை காலை 5:30 மணி
இடம் : மியாமி, அமெரிக்கா
சேனல் : பிபா ஆன்லைன்