games

img

விளையாட்டு

கேரளாவில் மெஸ்ஸி அக்., 15ஆம் தேதி டிக்கெட் விற்பனை

வரும் நவம்பர் மாதத்தில் நடைபெறும் நட்பு ரீதியான போட்டியில் விளையாட அர்ஜெண்டி னா அணி கேரளத்துக்கு வருகிறது. இந்தப் போட்டியில் ஆஸ்திரேலிய அணியுடன்  அர்ஜெண்டினா விளையாட இருக்கிறது. இதற்கான டிக்கெட் விற்பனை வரும் அக்டோ பர் 15ஆம் தேதி தொடங்குகிறது. டிக்கெட்டுகளின் விலை  குறித்து விரைவில் அறிவிக்கப்படுமென போட்டி ஏற்பாட்டா ளர்கள் கூறினாலும், டிக்கெட்டுகளின் விலை தோராயமாக ரூ.3,500 முதல் ரூ.10 லட்சம் வரை இருக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. நட்பு ரீதியான போட்டியில் பங்கேற்க நவம்பர் 14ஆம் தேதி கேரளம் (கொச்சி) வருகிறார் கால்பந்து உலகின் நட்சத்திர வீரரும், அர்ஜெண்டினா கேப்டனுமான மெஸ்ஸி. தொடர்ந்து நவ. 17ஆம் தேதி நேரு திடலில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக அவர் விளையாட இருக்கிறார். கோழிக்கோட்டில் மெஸ்ஸி சாலை வலம் வருவது, கொச்சியில் ரசிகர்களைச் சந்திப்பது குறித்த நிகழ்வுகள் தற்போது பரிசீலித்து இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

தமிழ்நாட்டில் இன்றுடன் புரோ கபடி நிறைவு கடைசி ஆட்டங்களில் தமிழ் தலைவாஸ் அணிக்கு அனுமதி வழங்கலாமே?

செப்., 29ஆம் தேதி முதல் புரோ கபடி ஆட்டங்கள்  தமிழ்நாட்டின் தலைநகர்  சென்னையில் நடைபெற்று  வருகிறது. இந்த புரோ கபடி ஆட்டங்கள் சென்னை மண்ணில் வெள்ளிக்கிழமை உடன்  நிறைவு பெறுகிறது. அதன்பிறகு  சனிக் கிழமை முதல் தில்லியில் அடுத்தகட்ட லீக் ஆட்டங்கள் நடைபெற உள்ளன.  சென்னை மண்ணில் வெள்ளிக்கிழமை அன்று 2 லீக் ஆட்டங்கள் நடைபெறுகிறது. இதுதான் சென்னை மண்ணின் இந்த ஆண்டுக்கான கடைசி புரோ கபடி போட்டிகளாகும். ஆனால் இந்த 2 ஆட்டங்களிலும் உள்ளூர் அணியான தமிழ் தலைவாஸ் விளையாடவில்லை. மாறாக குஜராத் - தில்லி, பெங்கால் - மும்பை அணிகள் விளையாடுகின்றன. சொந்த மண்ணில் கடைசி ஆட்டங்களில் தமிழ் தலைவாஸ் அணிக்கு அனுமதி வழங்குவது உள்ளூர் ரசிகர்களுக்கு விருந்தாக இருக்கும். ஆனால் புரோ கபடி நிர்வாகம் ரசிகர்களை பற்றி சிந்திக்கா மல் அட்டவணை தயாரித்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இன்றைய ஆட்டங்கள்

குஜராத் - தில்லி நேரம் : இரவு - 8 மணி    பெங்கால் - மும்பை நேரம் : இரவு - 9 மணி

இடம் : எஸ்டிஏடி மைதானம், சென்னை (சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே) டிக்கெட் பெற...  புக் மை ஷோ (https://in.bookmyshow.com/explore/kabaddi) இணையதளம் மூலமாக டிக்கெட்டுகள் பெறலாம். 

வுஹான் ஓபன் டென்னிஸ் : காலிறுதியில் சபலென்கா

சீனாவின் முக்கிய நகரங்களில் ஒன்றான வுஹானில் சர்வதேச டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. மகளிருக்கு மட்டும் நடைபெற்று வரும் இந்த தொடரின் ஒற்றையர் பிரிவு 4ஆவது சுற்று ஆட்டத்தில் போட்டித் தரவரிசையில் முதலிடத்தில் உள்ள பெலாரசின் சபலென்கா, போட்டித் தவரிசையில் 11ஆவது இடத்தில் உள்ள ரஷ்யாவின் சம்சோநோவா பலப்பரீட்சை நடத்தினர். தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடிய சபலென்கா  6-3, 6-2 என்ற நேர் செட் கணக்கில் அபார வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார்.  இதே பிரிவின் 4ஆவது சுற்று ஆட்டத்தில் அமெரிக்காவின் பெகுலா, இத்தாலியின் பவோலினி, செக் குடியரசின் சினியாகோவா ஆகியோரும் காலிறுதிக்கு தகுதி பெற்றனர்.
மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் : இன்றைய ஆட்டம்

நியூஸிலாந்து - வங்கதேசம் இடம் : கவுகாத்தி, அசாம் நேரம் : மதியம் 3:00 மணி சேனல் : ஸ்டார் ஸ்போர்ட்ஸ், ஜியோ ஸ்டார் (ஓடிடி)