games

img

மகளிர் உலகக்கோப்பை கால்பந்து 2023

இன்று நாக் அவுட் சுற்றுகள் தொடக்கம்

மகளிர் 9-வது சீசன் உலகக்கோப்பை கால்பந்து தொடர் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து நாடுகளில் நடைபெற்று வருகிறது.  இந்த தொடரில் வியாழனன்று லீக் சுற்று ஆட்டங்கள் நிறைவு பெற்ற நிலையில், வெள்ளியன்று விடுமுறை அளிக்கப்பட்டது. தொடர்ந்து சனியன்று நாக் அவுட் சுற்று ஆட்டங்கள் தொடங்குகின்றன. நாக் அவுட் சுற்றின் முதல் ஆட்டத்தில் சுவிட்சர்லாந்து - ஸ்பெயின் நாடுகளும், இரண்டாவது ஆட்டத்தில் சாம்பியன் அணிகளான ஜப்பான் - நார்வே நாடுகள் மோதுகின்றன. இந்த 2 ஆட்டங்களும் சனியன்று நடைபெறுகிறது. (குறிப்பு : நாக் அவுட் என்றால் வெளியேறுதல் சுற்று ஆகும்)

இன்றைய நாக் அவுட் சுற்று ஆட்டங்கள்

     சுவிட்சர்லாந்து - ஸ்பெயின்
நேரம் : காலை 10:30 மணி
இடம் : ஆக்லாந்து மைதானம், நியூசிலாந்து
 ஜப்பான் - நார்வே
  நேரம் : மதியம் 1:30 மணி
 இடம்: வெல்லிங்டன் மைதானம், நியூசிலாந்து

 

ஆஸ்திரேலிய  ஓபன் பேட்மிண்டன் பிரனோய் கலக்கல்

உலகின் முக்கிய பேட்மிண்டன் தொடர்களில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டன் தொடர் ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் நடை பெற்று வருகிறது. தற்போது இந்த தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஆடவர் ஒற்றையர் பிரிவு காலிறுதி ஆட்டத்தில் இந்தியாவின் நட்சத்திர வீரர் பிரனோய்  இந்தோனேசியாவின் கின்டிங்கை 16-21, 21-17, 21-14 என்ற செட் கணக்கில் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினர். இதே பிரிவின் மற்றொரு காலிறுதி ஆட்டத்தில் இந்திய வீரர்கள் கிடாம்பி ஸ்ரீகாந்த் - ராஜவாத் மோதினர். தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய ராஜவாத் 21-13, 21- 8 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அரை யிறுதிக்கு முன்னேறினார். ராஜவாத்தை விட கிடாம்பி ஸ்ரீகாந்த் அனுபவம் வாய்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பி.வி.சிந்து அவுட்

மகளிர் ஒற்றையர் பிரிவு காலிறுதி ஆட்டத்தில் இந்தியாவின் முன்னணி நட்சத்திர வீராங்கனை பி.வி. சிந்து, அமெரிக்காவின் பி.டபிள்யு.ஜாங்கை எதிர்கொண்டார். ஜாங் இரண்டாம் தர வீராங்கனை என்பதால் பி.வி. சிந்து  எளிதாக அரையிறுதிக்கு முன்னேறுவார்  என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், எல்லாம் தலைகீழாக அரங்கேறியது. தொடக்கம் புள்ளிகள் குவிப்பதில் ஆதிக்கம் செலுத்திய ஜாங் 21-12, 21-17  என்ற செட் கணக்கில் வெற்றி பெற பி.வி.  சிந்து காலிறுதி சுற்றோடு வெளியேறினார்.

மீண்டும் பார்ம் பிரச்சனையில் சிந்து

நீண்ட காலமாக பார்ம் பிரச்சனை யில் சிக்கித் தவித்த பி.வி.சிந்து ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டன் தொடரில் சற்று நிதான ஆட்டத்துடன் காலிறுதிக்கு முன்னேறினார். இதனால் பட்டம் வென்று பார்ம் பிரச்சனையை தீர்ப்பார் ஏன எதிர்பார்க்கப்பட்ட நிலை யில், மீண்டும் சொதப்பி பார்ம் பிரச்சனை யில் சிக்கியுள்ளார்.

இந்தியர்கள் மோதல்

சனியன்று நடைபெறும் ஆடவர் ஒற்றையர் பிரிவு முதல் அரையிறுதி ஆட்டத்தில் பிரனோய் - ராஜவாத் மோதுகின்றனர். இந்த ஆட்டம் இந்திய  நேரப்படி காலை 10:30 மணிக்கு நடை பெறுகிறது. (சேனல் : பிடபிள்யு யுடியூப் சேனல்)

ஆசியக்கோப்பை ஹாக்கி  2023

இன்று 
விடுமுறை
ஞாயிறன்று
3-ஆம் கட்ட லீக் ஆட்டங்கள் நடைபெறுகிறது