games

img

விளையாட்டு செய்திகள்

ஐரோப்பிய கால்பந்து - 2024
காலிறுதி சுற்றுக்கு தகுதி பெற்ற போர்ச்சுக்கல்

ஜெர்மனியில் நடைபெற்று வரும் 17ஆவது சீசன் ஐரோப்பிய கால்பந்து தொடரில் (யூரோ) தற்போது நாக் அவுட் சுற்று ஆட்டங்கள் நடைபெற்று வருகிறது. செவ்வாயன்று நடைபெற்ற 6ஆவது நாக் அவுட் சுற்று ஆட்டத்தில் போர்ச்சுக்கல் - ஸ்லோவேனியா அணிகள் மோதின. 

தொடக்கம் முதலே இரு அணிகளுமே கோலடிக்க அதிரடியாக விளையாடியதால் ஆட்டத்தின் ஒவ்வொரு நிமிடமும்  அனல் பறந்தது. ஆட்டத்தின் முழுநேர முடிவில் (90’) இரு அணி களும் கோலடிக்காததால் கூடுதல் நேரம் (30’) வழங்கப்பட்டது. கூடு தல் நேரத்திலும் போர்ச்சுக்கல் - ஸ்லோவேனியா அணிகள் கோல டிக்காத நிலையில், பெனால்டி ஷாட் அவுட் கொண்டுவரப்பட்டது. 

பெனால்டி ஷாட் அவுட்டில் போர்ச்சுக்கல் கோல்கீப்பர் கோஸ்டா வின் அசத்தலான செயல்பட்டால் போர்ச்சுக்கல் அணி 3-0 என்ற கோல் கணக்கில் காலிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றது.

காலிறுதிக்கு முன்னேறிய அணிகள்

1.சுவிட்சர்லாந்து    

2.ஜெர்மனி

3.இங்கிலாந்து

4.ஸ்பெயின்

5.பிரான்ஸ்

6.போர்ச்சுக்கல்

இன்று ஆட்டம் கிடையாது. 
ஜூலை 5 அன்று காலிறுதி ஆட்டங்கள் நடைபெறுகிறது.

நியூயார்க்

கோபா அமெரிக்கா - 2024
காலிறுதியில் உருகுவே, பனாமா

அமெரிக்காவில் நடைபெற்று வரும் 48ஆவது கோபா அமெரிக்கா தொடரில் தற்போது லீக் ஆட்டங்கள் நடைபெற்று வருகிறது. செவ்வாயன்று நடைபெற்ற 22ஆவது லீக் ஆட்டத்தில் உருகுவே - அமெரிக்கா அணிகள் மோதின. 

இந்த ஆட்டத்தில் அமெரிக்கா கோலடிப்பதை தவிர்த்து தடுப்பாட் டத்தில் ஆதிக்கம் செலுத்தியது. 

இதனால் கால்பந்து உலகின் நட்சத்திர அணிகளில் ஒன்றான உருகுவே முதல் பாதியில்  கோலடிக்க முடியாமல் கடுமையாக திணறிய நிலையில், இரண்டாவது பாதியின் 66-ஆவது நிமிடத்தில் பல்வேறு தடுப்புகளை தாண்டி உருகுவே வீரர் மதியாஸ் கோலடித்து அசத்தினார். 

இதுவே ஆட்டத்தின் வெற்றி கோலாக அமைந்த நிலையில், இறுதி யில் உருகுவே 1-0 என்ற கோல் கணக்கில் அமெரிக்காவை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது.

பனாமா அபாரம்

21ஆவது லீக் ஆட்டத்தில் பனாமா - பொலிவியா அணிகள் மோதின.  தொடக்கம் முதலே இந்த ஆட்டத்தில் ஆதிக்கம் செலுத்திய பனாமா 3-1 என்ற கோல் கணக்கில் அபார வெற்றிபெற்று காலிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றது.

இன்றைய ஆட்டங்கள்

பிரேசில் - கொலம்பியா
இடம் : கலிபோர்னியா, அமெரிக்கா
நேரம் : காலை 6:30 மணி

கோஸ்டாரிகா - பாரகுவே
இடம் : டெக்சாஸ், அமெரிக்கா
நேரம் : காலை 6:30 மணி

சேனல் : பிபா ஆன்லைன்
 

;