games

img

அர்ஜெண்டினா அணியின் தோல்விக்கான காரணம்?

36 ஆண்டுகளுக்கு முன் உலகக்கோப்பை வென்ற ஏக்கத்தில் இருக்கும் அர்ஜெண்டினா அணி நடப்பு சீசனில் கோப்பை வெல்லும் அளவிற்கு வலுவாக களமிறங்கியுள்ளது. கோபா வெற்றி, 22-வது சீசன் உலகக்கோப்பைக்கான தகுதி சுற்றில் தோல்வியை சந்திக்காமல் (17 ஆட்டம் - 11 வெற்றி, 6 டிரா) கத்தாருக்கு வந்தது போன்ற நிகழ்வுகள் அர்ஜெண்டினா அணிக்கு கண்டிப்பாக கோப்பையை வெல்லும் அளவிற்கு கூடுதல் சாதகத்தை ஏற்படுத்தும் என தொடக்கம் முதலே கணிக்கப்பட்டது.  மேலும் கால்பந்து உலகின் நட்சத்திர வீரரும், அர்ஜெண்டினாவின் கேப்டனுமான மெஸ்ஸிக்கு இது கடைசி உலகக்கோப்பை என்பதால் அவரது ரசிகர்கள் கோப்பையை மெஸ்ஸி கையில் கொடுக்க வேண்டும் என்றும், அதற்கு நமது ஆதரவு வேண்டும் என உலக மெஸ்ஸி மற்றும் அர்ஜெண்டினா ரசிகர்கள் கத்தாரில் கடன் வாங்கிய பணத்துடன் குவிந்துள்ளனர். இவ்வளவு கிளைமேக்ஸ் உள்ள நிலையில், முதல் லீக் ஆட்டத்தில் 2-1 என்ற கோல் கணக்கில் அர்ஜெண்டினாவை புரட்டியெடுத்தது சவூதி அரேபியா. சவூதி அரேபியாவின் இந்த பிரம்மாண்ட வெற்றி அர்ஜெண்டினாவிற்கு மட்டுமல்ல கால்பந்து உலகிற்கே அதிர்ச்சி சம்பவமாக உள்ளது. காரணம் கால்பந்து உலகில் பெரியளவு வரலாறு எதுவும் இல்லாத சவூதியிடம் உலகின் உன்னதமான வரலாறு கொண்ட அர்ஜெண்டினாவை வீழ்த்தியது சாதாரண விசயம் கிடையாது. 

அலட்சியம் தான் தோல்விக்கு காரணம்

  1.     கடந்த கால வரலாறுகளின் படி சவூதியை அசால்ட்டாக நினைத்தது n சவூதியில் இருந்த வீரர்களில் இருவரை தவிர மற்ற அனைவரும் மிக இளம் வீரர்கள் என்பதை உணராதது
  2.  முதல் கோல் போட்டவுடன் வெற்றி பெற்றுவிட்டோம் என செருக்காக விளையாடியது n தொடக்க ஆட்டத்திலேயே சுறுசுறுப்பு இல்லாமல் மந்தமாக அதாவது வேகமாக ஓடாமல் நடைப்பயிற்சி போல் நகர்ந்தது
  3.  கோலடிக்கும் மனநிலையை கையெடுக்காமல் தேவையில்லாமல் சவூதி வீரர்களிடம் தடுப்பாட்ட தாக்குதல் பாணியை தொடுத்தது
  4.  களத்தில் பம்பரமாக சுழன்ற சவூதியின் கோல் கீப்பர் அல் ஓவைசிடம் வியூகத்தை ஏற்படுத்தாமல் கிளப் போட்டியை போல் கேப்டன் மெஸ்ஸி செயல்பட்டது
  5.  முக்கியமாக நாங்கள் ஒரு பெரிய அணியிடம் விளையாடுகிறோம் என்ற முரட்டு மனநிலையில் மிகவும் சுறுசுறுப்பாக சவூதி களமிறங்கியது
  6.  காயம் இருந்தும் அர்ஜெண்டினா வீரர் ஏஞ்சல் டி மரியாவின் போராட்டத்தை போல அனைத்து வீரர்களும் போராடாதது  என பல்வேறு நிகழ்வுகள் அர்ஜெண்டினாவின் வரலாற்று தோல்விக்கு காரணமாக அமைந்துள்ளது. 

கரைசேருமா அர்ஜெண்டினா?

அர்ஜெண்டினாவிற்கு இன்னும் இரண்டு ஆட்டங்கள்  உள்ளன. நவ., 27-ஆம் தேதி மெக்ஸி கோவையும், டிச., 1-ஆம் தேதி போலந்து அணியையும் எதிர்கொள்கிறது. இரு அணிகளும் தடுப்பாட்டத்தில் பிரம்மாண்ட பார்மில் உள்ளன என்ப தால் இரண்டு ஆட்டங்களும் அர்ஜெண்டி னாவிற்கு கடினமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

படுதோல்வி அர்ஜெண்டினாவிற்கு சாதகத்தை உருவாக்கும்

விளையாட்டு உலகில் வெற்றி யை விட தோல்வி தான் அதிக  உந்துதலை ஏற்படுத்தும். அதன்படி அர்ஜெண்டினாவின் இந்த படுதோல்வி அந்த அணிக்கு ஒரு பாடமாக அமைந்து அடுத்து வரும் போட்டிகளில் கவனமாக விளையாடி வெற்றிநடைக்கு உதவி யாக இருக்கும் என எதிர்பார்க்கப்படு கிறது.

விடுமுறையாக கொண்டாடிய  சவூதி அரேபியா

உலகக்கோப்பை கால்பந்து வரலாற்றில் வரலாற்று வெற்றியை ருசித்துள்ளதை கொண்டா டும் வகையில், புதனன்று பள்ளி, கல்லூரி, அரசு நிறுவனங்களுக்கு விடு முறை அளித்து சவூதி மன்னர் சல்மான் செவ்வாயன்று அறிவித்தார். சவூதி அரே பியாவின் முக்கிய நகரங்களில் அந்நா ட்டு கொடிகளுடன் கொண்டாட்டம் நடை பெற்றது.