games

டி-20 உலகக்கோப்பை அட்டவணை வெளியீடு

8-வது ஆடவர் டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அக்டோபர் 16-ஆம் தேதி ஆஸ்திரேலியாவில் தொடங்குகிறது. நவம்பர் 13-ஆம் தேதி வரை நடைபெறும் இந்த தொடருக்கான அட்டவணையை சர்வதேச கிரிக்கெட் வாரியம் (ஐசிசி) வெளியிட்டுள்ளது.  நமீபியா, ஸ்காட்லாந்து, இலங்கை, மேற்கு இந்தியத் தீவுகள் ஆகிய அணிகள் மோதும் முதல் சுற்று ஆட்டத்தில் தகுதி பெறும் அணிகள், ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், வங்கதேசம், இங்கிலாந்து, இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகளுடன் சூப்பர் 12 ஆட்டங்களில் மோதும். இதனால் தகுதி சுற்று ஆட்டங்கள் நடைபெற்ற பின்பு தான் முழுமையான அட்டவணையை காணமுடியும். சில அணிகளுக்கு மட்டும் சூப்பர் 12-இல்  முதல் ஆட்டங்கள் மட்டும் வெளியிடப் பட்டுள்ளன. அதன்படி இந்தியா தனது முதல் போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. அக்டோபர் 23-ஆம் தேதி மெல்போர்ன் மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டி களுக்கான டிக்கெட் விற்பனை அடுத்த மாதம் 7-ஆம் தேதி தொடங்குகிறது. மைதானங்கள் அடிலெய்டு, பிரிஸ்பேன், கீலாங், ஹோபார்ட், மெல்போர்ன், பெர்த், சிட்னி

புரோ கபடி
இன்றைய ஆட்டங்கள்

பாட்னா - புனே (இரவு 7:30)
மும்பை - தெலுங்கு டைட்டன்ஸ் (இரவு 8:30)
ஜெய்ப்பூர் - தமிழ்நாடு (இரவு 9:30)