games

முன்னிலை பெறுமா தமிழ்நாடு? இன்று குஜராத்துடன் மோதல்

8-வது சீசன் புரோ கபடி தொடரில் பெரியளவில் தோல்விகளை சந்திக்காமல் சிறப்பாக விளையாடி வரும் தமிழ்நாடு அணி புள்ளிப்பட்டியலில் தற்போது 7-வது இடத்தில் (மொத்தம் 12 அணிகள்) உள்ளது. கடந்த வாரம் 5-வது இடத்தில் இருந்த தமிழ்நாடு அணி ஒரு டிரா, ஒரு தோல்வி என இரண்டு போட்டிகளின் முடிவுகளால் 7-வது இடத்திற்கு தாவியது. இந்நிலையில் 11-வது லீக் ஆட்டத்தில் தமிழ்நாடு அணி குஜராத் அணியை எதிர்கொள்கிறது. இந்த ஆட்டத்தின் முடிவு முக்கியமானது என்பதால் ரசிகர்கள் இந்த போட்டியை ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.

இன்றைய ஆட்டங்கள் 
தமிழ்நாடு - குஜராத் (இரவு 7:30)
பெங்களூரு - பாட்னா (இரவு 8:30)
இரண்டு ஆட்டங்களும் 
பெங்களூருவில் நடைபெறுகிறது.