புரோ கபடி தொடரின் 10-ஆவது சீசன் தற்போது நடுக்கட்ட த்தை தாண்டியுள்ள நிலையில், 7-ஆம் கட்ட லீக் ஆட்டங்கள் ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் நடை பெற்று வருகிறது. இந்நிலையில், விடுமுறை நாளான ஞாயிறன்று 2 லீக் ஆட்டங்கள் நடைபெற உள்ள நிலையில், முதல் ஆட்டத்தில் தமிழ்நாடு அணி, ஹரியானாவை எதிர்கொள்கிறது.
நீண்ட இழுவைக்குப் பிறகு தமிழ்நாடு அணி மீண்டும் பார்மில் நுழைந்துள்ள நிலையில், ஹரியானா அணியை வீழ்த்தி புள்ளிபட்டியலில் மேல்நோக்கி செல்லும் முனைப்பில் தீவிர பயிற்சியுடன் களமிறங்குகிறது. தமிழ்நாடு அணி தற்போதைய நிலையில், 11 ஆட்டங்களில் விளையாடி 3 வெற்றி, 8 தோல்வியுடன் 11-ஆவது இடத்தில் உள்ளது. இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றால் 9 அல்லது 8-ஆவது இடத்திற்கு முன்னேற வாய்ப்புள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இன்றைய ஆட்டங்கள்
இடம் : சவாய் மான்சிங் மைதானம்,
ஜெய்ப்பூர், ராஜஸ்தான்
சேனல் : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மொழி வரிசைகள், ஹாட் ஸ்டார் (ஒடிடி - இலவசம் இல்லை,
சந்தா கட்டணம் செலுத்தி இருந்தால் பார்க்கலாம்)
தில்லி - பாட்னா
(72-ஆவது லீக்)
நேரம் : இரவு 9 மணி
தமிழ்நாடு - ஹரியானா
(71-ஆவது லீக்)
நேரம் : இரவு 8 மணி