புரோ கபடி 2024
இன்று அரையிறுதி ஆட்டங்கள்
குறுகிய காலத்தில் பிரபலமடைந்துள்ள புரோ கபடி தொடரின் 10-ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், திங்களன்று நடைபெற்ற எலிமினேட்டர் ஆட்டங்களில் பாட்னா அணி தில்லி அணியையும், குஜராத் அணியை ஹரியானா அணியும் வீழ்த்தி, பாட்னா, ஹரியானா அணிகள் அரையிறுதிக்கு முன்னேறிய நிலையில், புதனன்று அரையிறுதி ஆட்டங்கள் நடைபெறுகிறது.
யாருக்கு வாய்ப்பு?
முதல் அரையிறுதி (பாட்னா - புனே)
இரு அணிகளும் சரிசம பலத்தில் இருந்தாலும், வலுவான ஆட்டத்திற னில் புனே அணி சற்று பலம்வாய்ந்த அணியாக உள்ளது. தடுப்பாட்டத்திலே யே வெற்றியை ருசிக்கும் வித்தியாச மான ஆட்டத்திறனை கொண்ட புனே அணி நடப்பு சீசனில் மிகச்சிறந்த ஆல்ர வுண்டர் அணியாக உள்ள நிலையில், புனே அணி இறுதிக்கு முன்னேற சகல வாய்ப்புகளும் உள்ளன.
அதே போல எலிமினேட்டரில் கடு மையாகப் போராடி அரையிறுதிக்கு முன்னேறியுள்ள 3 முறை சாம்பியனான பாட்னா அணி, கடந்த ஆட்டங்களைப் போல் அல்லாமல் புனே அணி மீது வலு வான ரெய்டுகளை தொடுத்தால் அந்த அணிக்கும் இறுதிச் சுற்று வாய்ப்பு பிரகாசமாகும். இப்படி இரு அணி களும் மாறுபட்ட ஆட்டத்திறன்களுடன் இறுதிக்கு முன்னேற துடிப்பதால், எந்த அணி இறுதிக்கு முன்னேறும் என ஆருடம் கூட கூற முடியாது.
இரண்டாவது அரையிறுதி (ஜெய்ப்பூர் - ஹரியானா)
ஹரியானா அணியை விட நடப்பு சாம்பியனான ஜெய்ப்பூர் அணி பிரம்மாண்ட பலத்துடன் உள்ளது. எந்த சூழலிலும், இக்கட்டான நேரத்திலும் ஜெய்ப்பூர் வீரர்கள் அசத்தலாக விளை யாடும் அதிரடி மனநிலை கொண்ட வர்கள் என்பதால், ஹரியானா அணியை எளிதாக வீழ்த்தி ஜெய்ப்பூர் அணி இறுதிக்கு முன்னேறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதே போல போதுமான அளவு அதி ரடி குணம் இல்லையென்றாலும், உறுதி யான போராட்ட குணமிக்க வீரர்களை கொண்டுள்ள ஹரியானா அணி வெற்றிக் காக எந்த நிலைக்கும் செல்லும் என்ப தால், அந்த அணிக்கும் இறுதி சுற்றுக்கு முன்னேற வாய்ப்புள்ளது. இதனால் இந்த ஆட்டத்தில் எந்த அணி வெற்றி பெறும் என திடமாக கருத்துகூறமுடியாது.
அரையிறுதி ஆட்டங்கள்
இடம் : பாலயோகி மைதானம், ஹைதராபாத், தெலுங்கானா
சேனல் : ஸ்டார் ஸ்போர்ட்ஸ், ஹாட் ஸ்டார் (ஒடிடி)