games

img

புரோ கபடி 2024

குறுகிய காலத்தில் விளையாட்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்துள்ள புரோ கபடி தொடரின் 10-ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், லீக் ஆட்டங்கள் முடிவில் புள்ளிப்பட்டியலில் முதல் 6 இடங்களை பிடித்த புனே, ஜெய்ப்பூர், தில்லி, குஜராத், ஹரியானா, பாட்னா ஆகிய அணிகள் குவாலிபையர் சுற்றுக்கு முன்னேறியது. திங்களன்று குவாலிபையர் ஆட்டங்கள் தொடங்க உள்ள நிலையில், குவாலிபையர் சுற்று நடைபெறும் இடமான தெலுங்கானா மாநிலத்தின் ஹைதராபாத்தில் உள்ள கச்சிபலி மைதானத்தில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

குவாலிபையர் ஆட்டங்கள்
எலிமினேட்டர் - 1
தில்லி - பாட்னா
எலிமினேட்டர் - 2
குஜராத் - ஹரியானா
இரண்டு ஆட்டங்களும் திங்களன்று (பிப்., 26) நடைபெறுகிறது
அரையிறுதி ஆட்டங்கள்
புனே - எலிமினேட்டர் - 1இல் வெற்றி பெறும் அணி
ஜெய்ப்பூர் -  எலிமினேட்டர் - 2இல் வெற்றி பெறும் அணி
இரண்டு ஆட்டங்களும் புதனன்று (பிப்., 28) நடைபெறுகிறது.