games

img

புரோ கபடி கோப்பை யாருக்கு?

இந்திய விளையாட்டு உலகின் பூர்வீக மாக கபடி இருந்தாலும் கிரிக்கெட்,  ஹாக்கி, டென்னிஸ், பேட்மிண்டன், கால்பந்து ஆகிய விளையாட்டு பிரிவுகளுக்கு பின்னரே கபடி இருந்தது. முக்கியமாக கபடி ஒரு கிராமம் சார்ந்த விளையாட்டு போன்று சித்தரிக்கப்பட்டு இருந்த நிலையில், 2014இல் ஐபிஎல் கிரிக்கெட் தொடரைப் போன்று புரோ கபடி என்ற பெயரில் கபடிக்கும் லீக் ஆட்டங்கள் தொடங்கப்பட்டன. 

தொடக்கத்தில் புரோ கபடி பெரியளவு பிரபலமடையாத நிலையில், தமிழ்நாடு, ஹரியானா உள்ளிட்ட அணிகள் கூடுதலாக சேர்க்கப்பட்டதால், 5-ஆவது சீசனிலிருந்து புரோ கபடி தொடர் இந்திய விளையாட்டு பிரபல மான தொடராக மாறியது.

இந்நிலையில், ரசிகர்களின் பலத்த எதிர்பார்ப்பு களுக்கு இடையே புரோ கபடி தொடரின் 10-ஆவது சீசன் கடந்த ஆண்டு இறுதியில் தொடங்கியது. லீக் ஆட்டங்கள் பிப்ரவரி மாதம் 21 அன்று நிறைவு பெற்ற நிலையில், புனே, ஜெய்ப்பூர், பாட்னா, தில்லி, ஹரியானா, குஜராத் அணிகள் குவாலிபையர் சுற்றுக்கு தகுதி பெற்றன. 

புள்ளிப்பட்டியலில் முதல் 2 இடங்களைப் பிடித்த புனே, ஜெய்ப்பூர் அணிகள் நேரடியாக அரையிறுதிக்கு முன்னேறிய நிலையில், குவாலிபையரின் எலிமினேட்டர் சுற்று முடிவில் பாட்னா, ஹரியானா ஆகிய அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின.

இறுதியில் புனே - ஹரியானா
புதனன்று நடைபெற்ற அரையிறுதி ஆட்டங்களில் நடப்பு சாம்பியனான ஜெய்ப்பூர் அணியை ஹரியானாவும், புனே அணி 37-21 என்ற கணக்கில் பாட்னா அணியையும் வீழ்த்தின. இதன்மூலம் புனே - ஹரியானா அணிகள் இறுதிக்கு முன்னேறிய நிலையில், வெள்ளியன்று இறுதி ஆட்டம் நடைபெறு கிறது. முதல்முறையாக கோப்பையை வெல்லும் முனைப்பில் புனே, ஹரியானா ஆகிய அணிகளும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தும் என்பதால் இந்த ஆட்டம் பரபரப்பாக நடைபெறும் என எதிர்ப்பார்க்கப் படுகிறது.

யாருக்கு வாய்ப்பு?
பலத்தில் ஹரியானா அணியை விட புனே அணி சற்று பலமாக உள்ளது. ரெய்டு மற்றும் தடுப்பாட்டம் என இரண்டு பிரிவுகளிலும் முரட்டுத்தன மான ஆட்டத்தை வெளிப்படுத்தும் இந்திய மற்றும் ஈரான் வீரர்கள் அணி யில் கலந்து இருப்பதால் புனே அணி கோப்பையை கைப்பற்ற 60% வாய்ப்புள்ளது.  அதே போல பயமறியாத இளம் வீரர்களை கொண்டுள்ள ஹரி யானா அணி சூழ்நிலைக்கு ஏற்ப ஆட்டத்தி னை மாற்றும் சிறப்புடையது. பயிற்சி யாளரின் அதிரடி உத்தரவுகளை உடனடி யாக உள்வாங்கி தாக்குதல் பாணி ஆட்டத்தை வெளிப்படுத்தும் ஹரியானா அணிக்கும் கோப்பையை வெல்ல சகல வாய்ப்புக்கள் இருந்தா லும், புனே அணியை கவனமாக சமாளித்தால் மட்டுமே அந்த அணிக்கு கோப்பை வெல்லும் கனவு நனவாகும்.

பரிசுத்தொகை

சாம்பியன் : ரூ.3 கோடி
2ஆம் இடம் : ரூ.1.8 கோடி
3ஆவது, 4ஆவது இடம்: 
தலா ரூ.90 லட்சம்
5ஆவது, 6ஆவது இடம்:
தலா ரூ.45 லட்சம்
சிறந்த வீரர் : ரூ.15 லட்சம்
சிறந்த ரைடர் : ரூ.10 லட்சம்
சிறந்த தடுப்பாட்டக்காரர்:
 ரூ.10 லட்சம்
சிறந்த அறிமுக வீரர் :
ரூ.8 லட்சம்
சிறந்த நடுவர்களுக்கு : 
தலா ரூ.3.5 லட்சம்

புனே - ஹரியானா
நேரம் : இரவு 8 மணி
இடம் : பாலயோகி மைதானம், ஹைதராபாத், தெலுங்கானா
சேனல் : ஸ்டார் ஸ்போர்ட்ஸ், 
ஹாட் ஸ்டார் (ஒடிடி)

ஹரியானா பயிற்சியாளர் மன்ப்ரீத் சிங் சண்டை இழுத்து விடாமல் இருப்பாரா?

இறுதிப்போட்டியில் விளையாடும் ஹரியானா அணியின் பயிற்சியாளராக இருப்பவர் மன்ப்ரீத் சிங். முன்னாள் புரோ கபடி வீரரான (பாட்னா) இவர் மற்ற பயிற்சியாளர்களை விட சற்று மாறுபட்டவர். அதாவது மற்ற பயிற்சியாளர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட இடத்தில் அமர்ந்து போட்டி வியூக கருத்துக்களை வீரர்களுக்கு உத்தரவிடுவார்கள். ஆனால் மன்ப்ரீத் சிங் இருக்கையிலேயே அமர மாட்டார். ஆட்டத்தின் ஒவ்வொரு ரெய்டு, தடுப்பாட்டம் என அனைத்திலும் தனது அணி வீரர்களிடம் கத்திக்கொண்டே இருப்பார். சிலசமயங்களில் எதிரணி வீரர்களை மரியாதை இல்லாமல் கூட பேசுவார். ஹரியானா வீரர்கள் அமைதியாக இருந்தாலும் மன்ப்ரீத் சிங் எதையாவது கூறி சண்டையை கோர்த்து விடுவார். நடப்பு சீசனில் மன்ப்ரீத் சிங்கின் ஆக்ரோஷ கருத்துக்களால் ஹரியானா வீரர்களுடன் பெங்களூரு, தமிழ்நாடு, மும்பை வீரர்கள் வம்புக்குச் சென்றுள்ளனர்.  மற்ற லீக் ஆட்டங்களிலேயே மன்ப்ரீத் சிங் வெறுமென இருக்க மாட்டார். இறுதிப்போட்டியில் சும்மா இருப்பாரா? இறுதிப்போட்டியில் நிச்சயம் எதையாவது கூறி புனே வீரர்களை வம்புக்கு இழுத்துவிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. என்ன நடக்கிறது என்று இறுதி ஆட்டத்தில் பார்க்கலாம்.