இன்றுடன் தமிழ்நாட்டில் புரோ கபடி நிறைவு
புரோ கபடி தொடரின் 10-ஆவது சீசன் நடுக்கட்டத்தை தாண்டியுள் ளது. கடந்த ஒரு வார காலமாக தமிழ்நாடு தலைநகர் சென்னையில் 4-ஆம் கட்ட லீக் ஆட்டங்கள் நடை பெற்ற நிலையில், 4-ஆம் கட்ட லீக் ஆட்டங்கள் புதனன்று நிறைவு பெறு கிறது. தொடர்ந்து வெள்ளியன்று உத்த ரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் 5-ஆம் கட்ட லீக் ஆட்டங்கள் நடைபெறுகிறது. வெற்றியுடன் விடைபெறுமா தமிழ்நாடு? இதுவரை நடைபெற்ற 9 சீசன் புரோ கபடி தொடர் பெங்களூரு, மும்பை, ஜெய்ப்பூர், தில்லி, கொல்கத்தா உள்ளிட்ட நகரங்களில் மட்டுமே நடை பெற்று வந்த நிலையில், நடப்பு சீசனில் இருந்து முதல்முறையாக தமிழ்நாட்டில் புரோ கபடி லீக் ஆட்டங்கள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தன. அதன்படி சென்னையில் 11 லீக் ஆட்டங்கள் நடைபெறும்படி அட்ட வணை வெளியிடப்பட்டது. இதில் சொந்த மண் என்ற அடிப்படை யில் தமிழ்நாடு அணி அதிகபட்சமாக 4 ஆட்டங்களில் விளையாடும்படி அட்டவணை தயாரிக்கப்பட்டு இருந்த நிலையில், இதுவரை விளையாடிய 3 ஆட்டங்களிலும் தமிழ்நாடு அணிதோற்றது. இந்நிலையில், புதனன்று சென்னை யில் நடைபெறும் கடைசி லீக் ஆட்டத்தில் தமிழ்நாடு அணி பலமான குஜராத் அணியை எதிர்கொள்கிறது. வெற்றியுடன் சொந்த மண்ணில் இருந்து விடைபெறும் முனைப்பில் தமிழ்நாடு தீவிர பயிற்சியுடன் கள மிறங்கும் நிலையில், தமிழ்நாடு ரசிகர் களும் இந்த போட்டியை ஆவலுடன் எதிர் பார்த்து வருகின்றனர்.
ஜெய்ப்பூர் - தில்லி
(43-ஆவது லீக்)
நேரம் : இரவு 8 மணி
இன்றைய ஆட்டங்கள்
இடம் : நேரு மைதானம் (எஸ்டிஏடி), சென்னை (பெரியமேடு), தமிழ்நாடு.
சேனல் : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மொழி வரிசைகள், ஹாட் ஸ்டார் (ஒடிடி - இலவசம் இல்லை, சந்தா கட்டணம் செலுத்தி இருந்தால் பார்க்கலாம்)
தமிழ்நாடு - குஜராத்
(44-ஆவது லீக்)
நேரம் : இரவு 9 மணி
எங்கள் நாட்டின் நலனே முக்கியம்
ஐபிஎல் போட்டிகளில் பங்கேறக் 3 ஆப்கன் வீரர்களுக்கு அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் தடை
உலகின் முக்கிய உள்ளூர் டி-20 தொடராக இருப்பது ஐபிஎல் தொடர் ஆகும். கோடிக்கணக்கில் வீரர் கள் ஏல நடைமுறை மற்றும் பரிசுத் தொகை, அணிகள் அளிக்கும் இதர வரு வாய் என பல்வேறு சிறப்பு அம்சங் கள் இருப்பது கிரிக்கெட் உலகில் ஐபி எல் தொடருக்கு தனி மவுசு உள்ளது. இதனால் உலக நாடுகளில் உள்ள கிரிக் கெட் வீரர்கள் ஐபிஎல் தொடரில் பங்கே ற்க ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில், 17-ஆவது ஐபிஎல் சீசன் ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ள நிலையில், இதற்கான வீரர்கள் பரி மாற்றம், வீரர்கள் மினி ஏலம் அனை த்தும் நிறைவு பெற்றது. இனி ஆடும் லெவன் மட்டுமே தேர்வு என்ற நிலை யில், ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரி யம் அதிர்ச்சி குண்டை வீசி கொல்கத்தா, ஹைதராபாத், லக்னோ அணிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதுயா தெனில் வரவிருக்கும் ஐபிஎல் தொட ரில் முஜீப் உர் ரகுமான், பசல்ஹக் பருக்கி, நவீன் உல் ஹக் ஆகியோருக்கு 2 ஆண்டுகளுக்கு வெளிநாட்டு லீக் போட்டிகளில் பங்கேற்பதற்காக தடையில்லா சான்றிதழ் வழங்க ஆப் கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மறுப்பு தெரிவித்துள்ளது. வெளிநாட்டு லீக் போட்டிகளை விட எங்களுக்கு தேச நலன்தான் முக்கியம் எனக் கூறப் பட்டுள்ளது. ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரி யத்தின் இந்த அறிவிப்பால் ஐபி எல் தொடரில் இருந்து முஜீப் உர் ரகு மான் (கொல்கத்தா), நவீன் உல் ஹக் (லக்னோ), பசல்ஹக் பருக்கி (ஹைதராபாத்) ஆகியோர் வெளியேறு கின்றனர்.
ஸ்டார்க் பேச்சால் கொல்கத்தா கலக்கம்
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் அறிவிப்பால் ஏற்கெனவே கொல்கத்தா அணி நிர்வாகம் கதிகலங்கியுள்ள நிலையில், புதிய வரலாற்று தொகையுடன் ரூ.24.75 கோடி கொடுத்து வாங்கப்பட்ட ஆஸ்திரேலிய நட்சத்திர பந்துவீச்சாளரின் பேச்சு அந்த அணி நிர்வாகத்தை பீதியில் ஆழ்த்தியுள்ளது. கொல்கத்தா அணி பதற்றம் அடையும் வகையில் ஸ்டார்க் கூறியதாவது,”என்ன நடந்தாலும், நாட்டுக்காக விளையாடுவதே என்னுடைய இலக்கு. எப்பொழுதும் சர்வதேச கிரிக்கெட்டிற்கு முக்கியத்துவம் கொடுப்பேன். குடும்பத்துடன் அதிகநேரம் செலவிட்டு, அதன் மூலம் கிடைக்கும் புத்துணர்ச்சி பெற்று ஆஸ்திரேலிய அணிக்காக விளையாடுவேன். இப்போதும் டெஸ்ட் விளையாட்டில் விளையாடுவதே என்னுடைய முதன்மை முக்கியத்துவம் ஆகும். ஐபிஎல் போட்டியில் எனக்கு கிடைத்த பணம் சிறப்பாக இருந்தாலும், சர்வதேச கிரிக்கெட்டிற்கே முன்னுரிமை அளிப்பேன்” எனக் கூறியுள்ளார்.