games

img

சர்பிராஸ் கானின் தந்தைக்கு கார் பரிசு: மஹிந்திரா நிறுவனம் வழங்குகிறது

சர்பிராஸ் கான் இந்திய அணியில் என்ட்ரி ஆன நிகழ்வு ஒரு வர லாற்று நிகழ்வு போல அரங்கேறியுள்ள நிலையில், சர்பிராஸ் கானின் தந்தை நௌசாத் கானுக்கு கார் (தார் - ஜீப்) பரிசளிக்க உள்ளதாக மஹிந்திரா நிறுவனம் அறிவித்துள்ளது. இதுகுறித்து மஹிந்திரா நிறுவன உரிமையா ளரும், நாட்டின் மிகப்பெரிய தொழிலதிபருமான ஆனந்த் மஹிந்திரா தனது டுவிட்டர் எக்ஸ் பக்கத்தில் கூறுகையில்,”ஒரு உத்வேகம் தரும் பெற்றோரான நௌ ஷாத் கான் என்னிடமிருந்து தார் காரை பரிசாக ஏற்றுக்கொண்டால் அது எனது பாக்கியமாகவும், கௌரவமாகவும் கருதுவேன்” என்று குறிப்பிட்டிருந்தார்.