உலகின் முதன்மையான விளையாட்டுத் தொடரான ஒலிம்பிக் தொடரின்
33ஆவது சீசன் பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரீஸில் நடைபெற்று வருகிறது.
அரையிறுதியில் இந்தியா
பாரீஸ் ஒலிம்பிக் தொட ரில் இந்தியா சார்பில் மொத்தம் 117 வீரர் - வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
துப்பாக்கிச்சூடுதலில் தவிர மற்ற பிரிவுகளில் இந்திய நட்சத்தி ரங்கள் கடுமையாக திணறி வரு கின்றனர். புரியும்படி சொன்னால் ஒலிம்பிக் தொடரில் இருத்து அடுத்த டுத்து வெளியேறி வருகின்றனர். எனினும் இந்திய ரசிகர்களுக்கு ஆறுதல் அளிக்கும் விதமாக ஆடவர் ஹாக்கி அணி அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் நிலையில், ஞாயிறன்று நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில் இந்தியா - பிரிட்டன் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
தொடக்கம் முதலே விறுவிறுப் பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தின் முழுநேர முடிவில் இரு நாடுகளும் 1-1 என்ற கோல் கணக்கில் சமனில் இருந்தன. இதனால் வெற்றியை தீர்மானிக்க பெனால்டி ஷூட் அவுட் முறை கடைபிடிக்கப்பட்டது. பெனால்டி ஷூட் அவுட்டில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்தியா 4-2 என்ற கோல் கணக்கில் பலமான பிரிட்டனை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறி அசத்தியது.
இந்திய வீரருக்கு ரெட் கார்டு
விதிகள் மீறி செயல்பட்டதால் இந்திய வீரர் அமித் ரோகிதாஸிற்கு கள நடுவர் ரெட் கார்டு கொடுத்தார். இதனால் மித் களத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட நிலையில், 2ஆம் பாதியில் இருந்து 10 வீரர்களுடன் மட்டுமே ஆடியது என்பது குறிப்பிடத்தக்கது.
லக்சயா சென் அதிர்ச்சி
ஆடவர் பேட்மிண்டன் பிரிவில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த அதிரடிக்கு பெயர் பெற்ற டென் மார்க்கின் விக்டர் ஆக்சல்சென்னை எதிர்கொண்டார். தொடக்கத்தில் ஆதிக்கம் செலுத்தி அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த லக்சயா சென், முதல் செட்டின் நடுப்பகுதியில் திடீ ரென பார்ம் இழந்தார். இதனால் முதல் செட்டை ஆக்சல்சென் 22-20 என்ற கணக்கில் கைப்பற்றினார். தொடர்ந்து இரண்டாவது செட்டிலும் ஆதிக்கம் செலுத்திய விக்டர் ஆக்சல்சென் அந்த செட்டை 21-14 என்ற கணக்கில் கைப்பற்றி, 22-20, 21-14 என்ற கணக்கில் வெற்றி பெற்று இறுதிக்கு முன்னேறினார். இந்திய வீரர் லக்சயா சென் அரையிறுதியில் வெற்றி பெற்று தங்கம் அல்லது வெள்ளி வெல்வார் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், அரையிறுதியோடு அவர் வெளியேறினார். எனினும் ஒலிம்பிக் பேட்மிண்டன் விதிப்படி வெண்கலப் பதக்கத்திற்கான ஆட்டத்தில் லக்சயா சென் விளையாட உள்ளார்.
லவ்லினாவும் அவுட்
மகளிர் குத்துச்சண்டையில் கண்டிப்பாக பதக்கம் வெல்வார் என அதிகம் எதிர்பார்க்கப்பட்ட லவ்லினா போர்கோஹெய்ன் (72 கிலோ) ஞாயிறன்று நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில் சீனாவின் லீ குவானை எதிர் கொண்டார். தொடக்கம் முதலே சீன வீராங்கனை லீ குவான் ஆக்ரோசமான தாக்குதலை கையி லெடுத்ததால் லவ்லினா நிலைகுலைந்தார். ஆட்டநேர முடிவில் சீனாவின் லீ குவானிடம் 4-1 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேற, கடந்த டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலப்பதக்கம் வென்ற லவ்லினா போர்கோஹெய்ன் பாரீஸ் ஒலிம்பிக் தொடரில் இருந்து வெறுங்கையோடு வெளியேறினார்.
கடும் வெப்பம், காற்று மாசுபாடு
உலகநாடுகளின் வீரர் - வீராங்கனைகள் அவதி
ஒலிம்பிக் தொடர் நடைபெற்று வரும் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் கால நிலை மாற்றத்தால் வழக்கத்திற்கு மாறாக 40 டிகிரி செல்சியார் அள விற்கு கடும் வெப்ப அலை வீசி வருகிறது. குளிர்பிரதேச பகுதி யில் வெப்பம் மிரட்டி வருவதால் உலக நாடுகளின் வீரர் - வீராங் கனைகள் கடும் அவதிக் குள்ளாகி வருகின்றனர். இந்தியா, அமெரிக்கா, நார்வே, டென்மார்க், சுவீடன், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளின் வீரர்கள் - வீராங் கனைகள் வெப்ப அலையை தாங்க முடியாமல் போட்டியின் பொழுதே சோர்ந்து கீழே உட்கார்ந்த சம்பவமம் அரங் கேறியுள்ளது. ஆடவர் 50 மீட்டர் 3 நிலை துப்பாக்கிச் சுடுதல் இறு திப் போட்டியில் வெண்கலப் கதக்கம் வென்ற இந்திய வீரர் ஸ்வப்னில் குசலே உள்பட அனை வரும் வெப்பத்தால் மயக்கம் வருவதாக போட்டி அமைப்பா ளர்களிடம் கூறியுள்ளதாக தகவல் ஒன்றும் வெளியாகியுள்ளது.