ஆடவர் 65 கிலோ பிரிவில் இந்திய வீரர் பஜ்ரங் புனியா தனது அரையிறுதி ஆட்டத்தில் அஜர்பைஜன் நாட்டின் ஹாஜியை எதிர்கொண் டார். இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதலே தாக்குதல் பாணியில் புள்ளிகளை குவித்த ஹாஜி 12-5 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்று இறுதிக்குமுன்னேறினார். இறுதிக்கு முன்னேறுவார் என எதிர்பார்க்கப்பட்ட பஜ்ரங் புனியா அதிர்ச்சி தோல்வியுடன் மைதானத்தை விட்டு வெளியேறினார். ரெபேசேஞ் வாய்ப்பு மூலம் சனியன்று வெண்கலப்பதக்கத்திற்கான ஆட்டத்தில் பங்கேற்கிறார்.
சீமாவும் தோல்வி
மகளிர் 50 கிலோ பிரிவில் இந்திய அணியின் சீமா துனிசியாவின் சர்ராவை எதிர்கொண்டார். இந்த ஆட்டத்தில் 1-3 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்ந்து வெளியேறினார்.
********
ஒலிம்பிக் எப்போது நிறைவு பெறுகிறது?
32-வது ஒலிம்பிக் தொடர் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் இந்திய நேரப்படி ஞாயிறன்று மதியம் 1 மணிக்கு மேல் நிறைவு பெறும். கடைசி போட்டியாக ஆடவர் தண்ணீர் பந்தாட்டம் நடைபெறும். அதன் பின்பு இறுதி நிகழ்ச்சி நடைபெறும்.