games

img

தீவிர மனஅழுத்தம்....  ஒலிம்பிக்கில் இருந்து முன்னணி வீராங்கனைகள் விலகல்... 

டோக்கியோ 
32-வது ஒலிம்பிக் தொடர் கொரோனா தொற்றுக்கு இடையே பலத்த பாதுகாப்புடன் ரசிகர்கள் இல்லாமல் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வருகிறது. வியாழனுடன் 7 நாட்கள் நிறைவடைந்த நிலையில், பல்வேறு சர்ச்சைகள், சாகசம், ஆச்சர்யம் என அரங்கேறி வருகின்றன. 

வீரர்கள் பலர் கொரோனா தொற்று காரணமாக விலகிய நிலையில், மனஅழுத்தம் காரணமாக முன்னணி வீராங்கனைகள் 2 பேர் ஒலிம்பிக் தொடரில் இருந்து விலகியுள்ளனர். 6 முறை ஒலிம்பிக் பதக்கம் வென்ற அமெரிக்காவின் சிமோன் பைல்ஸ் (ஜிம்னாஸ்டிக்), உலகின் முன்னணி இளம் டென்னிஸ் வீராங்கனையான ஜப்பானின் ஒசாகா ஆகிய இரண்டு  பேரும் தீவிர மனஅழுத்தம் காரணமாக விலகியுள்ளனர். இதில் சிமோன் பைல்ஸ் இறுதி போட்டியில் இருந்து விலகியுள்ளார்.