ஐபிஎல் 2025 சென்னை அணி வெளியேறியது
18ஆவது சீசன் ஐபிஎல் தொடர் தற்போது நடுக்கட்டத்தை தாண்டியுள்ள நிலையில், வெள்ளிக்கிழமை அன்று நடைபெற்ற 43ஆவது லீக் ஆட்டத்தில் சென்னை - ஹைதராபாத் அணிகள் மோதின. தொடக்கம் முதலே பரபரப்பாக நடை பெற்ற இந்த ஆட்டத்தில் ஹைதராபாத் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அதே போன்று சென்னை அணி 7ஆவது வெற்றியுடன் நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் இருந்து முதல் அணியாக வெளியேறியது. சென்னை அணிக்கு இன்னும் 5 லீக் ஆட்டங்கள் உள்ளன. இந்த 5 லீக் ஆட்டங்களிலும் வெற்றி பெற்றாலும், 5 முறை சாம்பியனான சென்னை அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற வாய்ப்பில் லை. அதனால் ஐபிஎல் அணிகளில் அதிக ரசிகர்கள் பட்டாளத்தை கொண்ட சென்னை அணி முதல் அணியாக வெளி யேறுவது, அந்த அணியின் ரசிகர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.
விட்டுக்கொடுக்க மாட்டோம்
ஐபிஎல் கோப்பையே வெல்லாத பெங்களூரு அணி ரசிர்கர்கள் 18 வருடங்களாக பிரம்மாண்ட ஆதரவு வழங்கி வருகின்றனர். 5 முறை கோப்பையை வென்று, நிறைய போட்டிகளில் இறுதிவரை முன்னேறி கோப்பையை நழுவவிட்ட சென்னை அணியை நாங்கள் ஒரே சீசன் தோல்விக்காக விட்டுக்கொடுக்க மாட்டோம். கடைசி 5 லீக் ஆட்டங்களுக் கும் வலுவான ஆதரவு அளிப்போம் ; அதே போல அடுத்த சீசனில் பிரம் மாண்ட வரவேற்பு அளிப்போம் என சென்னை ரசிகர்கள் சமூக வலைத் தளங்களில் ஆதரவு கருத்து தெரிவித்து வருகின்றனர். இதனால் சென்னை அணி ரசிகர்களின் ஆதரவு மழையில் நனைந்து வருகிறது.
இன்றைய ஆட்டம்
சேனல் : ஸ்டார் ஸ்போர்ட்ஸ், ஜியோ ஸ்டார் (ஓடிடி)
மும்பை - லக்னோ (45ஆவது லீக்)
நேரம் : மாலை 3:30 மணி இடம் : வான்கடே மைதானம், மும்பை, மகாராஷ்டிரா
தில்லி - பெங்களூரு (46ஆவது லீக்)
நேரம் : இரவு 7:30 மணி இடம் : ஜெட்லீ மைதானம், தில்லி
ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் இந்தியாவிற்கு 43 பதக்கங்கள் உறுதி
ஜோர்டான் நாட்டு தலைநகர் அம்மானில் இளையோர் குத்துச்சண்டைப் போட்டிகள் (U-15 & U-17) நடைபெற்று வருகின்றன. இந்த தொடரின் பல்வேறு எடைப்பிரிவு களில் இந்தியா 43 பதக்கங்களை வெல்வது உறுதி செய்துள்ளது. அதாவது 15 வயதுக் குட்பட்டோர் பிரிவில் இந்தியா குறைந்தது 25 பதக்கங்களையும், அதே நேரத்தில் 17 வய துக்குட்பட்டோர் பிரிவில் மேலும் 18 பதக்கங்கள் வெல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. காரணம் குத்துச்சண்டை விதிகளின் படி அனைத்து அரையிறுதிப் போட்டியாளர்களுக்கும் வெண்கலப் பதக்கங்கள் வழங்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
மாட்ரிட் ஒபன் டென்னிஸ் காயம் காரணமாக வெளியேறிய ரூனே
ஸ்பெயின் நாட்டின் தலைநகர் மாட்ரிட் நகரில் “ஏடிபி மாஸ்டர்ஸ் 1000” தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவு 2ஆவது சுற்று ஆட்டத்தில் தரவரிசையில் 8ஆவது இடத்தில் உள்ள டென்மார்க்கின் ரூனே, தரவரிசை யில் இல்லாத இத்தாலியின் பிலவியோவை எதிர்கொண்டார். இந்த ஆட்டத்தில் ரூனே ஓட முடியாமல் கடுமை யாக திணறினார். இதனை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட இளம் வீரர் பிலவியோ முதல் செட்டை 6-2 என்ற கணக்கில் கைப்பற்றினார். இந்நிகழ்வுடன் ரூனே காயம் காரணமாக வெளியேறி னார். அதிர்ஷ்ட வாய்ப்புடன் இத்தாலியின் பிலவியோ 3ஆவது சுற்றுக்கு முன்னேறினார். மாட்ரிட் ஒபன் டென்னிஸ் களிமண் தரையில் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.