games

img

பாரா ஒலிம்பிக் : துப்பாக்கி சுடுதலில் வெண்கலம் வென்ற இந்திய வீரர் சிங்ராஜ் அதானா

டோக்கியோ பாரா ஒலிம்பிக் துப்பாக்கி சூடுதல் போட்டியில் இந்திய வீரர் சிங்ராஜ் அதானா வெண்கல பதக்கம் வென்றுள்ளார்.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் மாற்றுத்திறனாளிகளுக்கான 16வது பாரா ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது.  இதில், இன்று நடந்த ஆடவர் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் எஸ்.எச்.1 துப்பாக்கி சுடுதல் இறுதிப் போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த வீரர் சிங்ராஜ் அதானா 3வது இடம் பிடித்து வெண்கல பதக்கம் வென்றுள்ளார்.

அதானா மொத்தம் 216.8 புள்ளிகள் பெற்று 3வது இடத்தை பிடித்தார். 8 பேர் பங்கேற்ற இந்த இறுதிப் போட்டியின் முடிவில், சிங்ராஜ் அதானா வெண்கல பதக்கத்தைத் தட்டி சென்றார். அவருடன் இறுதிப் போட்டியில் விளையாடிய மற்றொரு இந்திய வீரர் மணீஷ் நார்வால் 7வது இடம் பிடித்தார். தகுதி சுற்றில் நார்வால் முதல் இடத்திலிருந்த நிலையில், சிங்ராஜ் 6வது இடத்திலிருந்தது குறிப்பிடத்தக்கது.