டோக்கியோ
டோக்கியோ ஒலிம்பிக் தொடரில் தொடக்கம் முதலே அசத்தலாக விளையாடி வரும் இந்திய ஆடவர் ஹாக்கி அணி காலிறுதிக்கு எளிதாக முன்னேறியது. சனியன்று மாலை நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில் இந்திய அணி பிரிட்டனை எதிரிகொண்டது. மிகவும் பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இந்திய அணி 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது. ஒலிம்பிக் திருவிழாவில் இந்திய ஆடவர் 41 ஆண்டுகளுக்கு பிறகு அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.