games

img

டோக்கியோ ஒலிம்பிக்...   70 ஆயிரம் மக்கள் தொகை கொண்ட பெர்முடாவிற்கு தங்கப்பதக்கம்... 

டோக்கியோ 
வடக்கு அண்டலாண்டிக் பகுதியில் உள்ள ஒரு தீவு நாடு... மொத்தம் 70 ஆயிரம் மக்கள் தொகை கொண்ட குட்டி நாடு..  பெருமுடா முக்கோணம் என்ற மர்ம தேச பகுதி மூலம் உலகிற்கு இந்த பகுதி ஓரளவு பிரசித்தி பெற்றது... கிரிக்கெட் வீரரான லெவர்ராக் என்ற குண்டு மனிதர் மூலம் விளையாட்டில் கொஞ்சம் பிரபலம்... இது தான் பெருமுடா தேசத்தின் பெருமைகளும், சாதனைகளும்...

இதையெல்லாம் பின்னுக்குத்தள்ளி இன்று உலகையே திருப்பி வைத்திருக்கிறது ஒரே ஒரு தங்கப்பதக்கம். ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வரும் 32-வது ஒலிம்பிக் தொடரின் டிரையாத்தலான் (கலப்பு விளையாட்டு) என்ற பிரிவில் பெருமுடா வீராங்கனை புளோரோ டஃபி தங்கம் வென்று அசத்தியுள்ளார்.  

1976-ஆம் ஆண்டு கனடாவில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் கிளாரன்ஸ் என்பவர் வெண்கலப்பதக்கம் வென்றார். இது தான் அந்நாட்டின் முதல் ஒலிம்பிக் பதக்கமாகும். 45 வருடங்களுக்கு பின்னர் தற்போது தங்கப்பதக்கம் கிடைத்துள்ளது. 130 கோடிக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட இந்தியா ஒரே ஒரு வெள்ளிப்பதக்கத்துடன் 38-வது இடத்தில் உள்ள நிலையில், உலக வரைபடத்தில் கண்ணக்குத் தெரியாத குட்டி நாடு தங்கம் வென்று அசத்தியது மிகப்பெரிய சாதனை மட்டுமல்ல... வரலாறு கலந்த செய்தி தொகுப்பு எனவும் கூறலாம்.