games

img

ஒலிம்பிக்கில் தங்கம் வென்று சாதனை படைத்த 13 வயது வீராங்கனை

பெண்களுக்கான ஒலிம்பிக் ஸ்கேட்போர்ட் போட்டியில் ஜப்பானைச் சேர்ந்த மோமிஜி நிஷியா தங்கம் வென்றுள்ளார். 

டோக்கியோ ஒலிம்பிக் பெண்களுக்கான ஸ்கேட்டிங் போட்டியில் 13 வயதான ஜப்பானைச் சேர்ந்த சிறுமி  மோமிஜி நிஷியா தங்கம் வென்றுள்ளார். இதன் மூலம் பதக்கப் பட்டியலில் 6 தங்கங்களுடன் ஜப்பான் 3வது இடத்தில் உள்ளது. 

நிஷியா 15.26 மதிப்பெண்களுடன் தங்கப் பதக்கம் வென்றார். மற்றொரு ஜப்பானிய வீராங்கனையான 16 வயதுடைய ஃபூனா நகயாமா 14.49 மதிப் பெண்களுடன் வெண்கலப் பதக்கம் வென்றார். ரஷ்யாவைச் சேர்ந்த 13 வயது  ராய்சா லீல் வெள்ளிப் பதக்கத்தை வென்றார். 

டோக்கியோ ஒலிம்பிக் மூலம் அறிமுகமான ஸ்கேட்போர்ட்டிங் விளையாட்டின் முதலாவது தங்கப்பதக்கத்தை ஜப்பான் நாட்டின் இளம் வீரர் யூட்டோ ஹொரிகோம் நேற்று வென்றார். இந்நிலையில் இன்று ஒசாக்காவைச் சேர்ந்த 13 வயதுடைய நிஷியா ஜப்பானுக்கு மீண்டும் ஒரு தங்கப் பதக்கம் பெற்றுக் கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.