games

img

விளையாட்டு

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் அரையிறுதியில் சுவிட்டோலினா

ஆண்டின் முதல் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் போட்டி யான ஆஸ்திரேலிய ஓபன் தொடரின் 114ஆவது சீசன் தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. செவ்வாயன்று நடைபெற்ற மகளிர்  ஒற்றையர் பிரிவின் காலிறுதி ஆட்டத் தில் தரவரிசையில் முதலிடத்தில் உள்ள பெலாரசின் சபலென்கா, தரவரி சையில் 29ஆவது இடத்தில் உள்ள அமெரிக்காவின் ஜோவிச்சை எதிர்கொண்டார். வழக்கம் போல தொடக்க கேம் முதலே, அதிரடியாக விளையாடிய சபலென்கா 6-3, 6-0  என்ற செட் கணக்கில் அபார வெற்றி  பெற்று, அரையிறுதிக்கு முன்னேறினார்.  மற்றொரு காலிறுதி ஆட்டத்தில் தரவரிசையில் 3ஆவது இடத்தில் உள்ள அமெரிக்காவின் கோகா கவுப், தரவரிசையில் 12ஆவது இடத்தில் உள்ள உக்ரைனின் சுவிட்டோலினா ஆகியோர் பலப்பரீட்சை நடத்தி னர். இந்த ஆட்டத்தில் கவுப் எளிதாக வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப் பட்டது. ஆனால் அதிரடியில் இறங்கிய  சுவிட்டோலினா 6-1, 6-2 என்ற நேர் செட் கணக்கில் எளிதாக வெற்றி பெற்று, அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றார்.  ஜுவரேவ் அபாரம் ஆடவர் ஒற்றையர் பிரிவு காலிறுதி ஆட்டத்தில் (செவ்வாயன்று) தரவரி சையில் 3ஆவது இடத்தில் உள்ள  ஜெர்மனியின் ஜுவரேவ், தரவரிசை யில் 25ஆவது இடத்தில் உள்ள அமெரிக்காவின் டியானை எதிர்கொண் டார். கடுமையான போராட்டத்துக்குப் பின் 6-3, 6-7 (5-7), 6-1, 7-6 (7-3) என்ற செட் கணக்கில் டியானை வீழ்த்தி ஜுவ ரேவ் அரையிறுதிக்கு முன்னேறினார்.

டி-20 உலகக்கோப்பை 11 மணிநேரத்தில் வீரர்கள் பட்டியலை வெளியிட்டு ஸ்காட்லாந்து அசத்தல்

இந்தியாவில் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் இருப்ப தாகக் கூறி அடுத்த மாதம் நடைபெற உள்ள டி-20 உலகக்கோப்பை தொடரில் இருந்து வங்கதேசம் விலகியது. இதனால் மாற்று அணியாக ஐரோப்பா கண்டத்தின் ஸ்காட்லாந்து அணி சேர்க்கப்பட்டுள்ளது. இந்நிலையில், உலகக்கோப்பை அணியில் சேர்க்கப் பட்ட வெறும் 11 மணிநேரத்தில் ஸ்காட்லாந்து அணி வீரர்கள்  பட்டியலை வெளியிட்டு அசத்தியுள்ளது. ரிச்சி பெர்ரிங்டன் தலைமையிலான ஸ்காட்லாந்து அணியில் மேத்யூ க்ராஸ்  (விக்கெட் கீப்பர்),  பிராட்லி கார்ரி, கிறிஸ் க்ரீவ்ஸ், ஒலி ஹேர்ஸ்,  ஜாக் ஜார்விஸ், மைக்கேல் லீஸ்க், பிராண்டன் மெக்முல்லன், ஜார்ஜ் முன்சி, சபியான் ஷெரீப், கிறிஸ் சோல், மார்க் வாட், சார்லி டீயர், ஜாஸ்பர் டேவிட்சன், குவாசிம் கான் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இதில்  குவாசிம் கான் ஆப்கானிஸ்தானில் பிறந்து ஸ்காட் லாந்துக்காகத் தேர்வாகியுள்ள புதுமுக வேகப்பந்து வீச்சாளர் ஆவார். சாதனை தான் பொதுவாக உலகக்கோப்பை போன்ற முக்கிய தொட ரில் அணி வீரர்களை தேர்வு செய்ய ஒரு மாதமாக பல கூட்டங்கள் நடத்தப்படும். ஒரு சில உள்ளூர் போட்டிகளை யும் கவனத்தில் கொண்டு கூட்டத்தில் விவாதிப்பார்கள். இதன் பின்னரே வீரர்கள் பட்டியல் வெளியிடப்படும். ஆனால் ஸ்காட்லாந்து அணி 11 மணிநேரத்தில் வீரர்களின் பட்டியலை வெளியிட்டு இருப்பது குறிப்பிட்ட சாதனைக்குரிய விஷயம் தான்  என்பது குறிப்பிடத்தக்கது.

கத்தாரிடம் ஆசிய ஒலிம்பிக் கவுன்சில் பொறுப்பு

ஆசிய ஒலிம்பிக் கவுன்சில் தலைவராக இருந்த இந்தியாவின் ரந்தீர் சிங், உடல்நலக்குறைவு காரணமாக பதவியில் இருந்து விலகினார். இதனையடுத்து, உஸ்பெகிஸ்தானில் திங்களன்று நடைபெற்ற ஆசிய ஒலிம்பிக் கவுன்சில் ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில் கத்தாரைச் சேர்ந்த ஷேக் ஜோவான் பின் ஹமாத் அல் தானி புதிய தலைவராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். 2028ஆம் ஆண்டு வரை அந்த பொறுப்பில் தொடருவார். ஷேக் ஜோவான் கத்தார் ஒலிம்பிக் கமிட்டியின் தலைவராகவும் இருக்கிறார். 2036ஆம் ஆண்டு ஒலிம்பிக்  போட்டி உரிமத்தை கத்தாருக்கு பெறுவதே அவரது இலக்கு என செய்திகள் வெளியாகியுள்ளன.