தேசிய சீனியர் ஆடவர் கபடி போட்டி இந்தியன் ரயில்வே தொடர்ந்து 7ஆவது முறையாக சாம்பியன்
குஜராத் மாநிலம் வதோதராவில் உள்ள சாமா உள்விளையாட்டு அரங்கில் கடந்த நான்கு நாட்களாக (பிப்ரவரி 24-27, 2026) நடை பெற்று வந்த, 72ஆவது தேசிய சீனியர் ஆடவர் கபடி போட்டி உற்சாகமாக நிறைவடைந்தது. இந்தத் தொடரில் மொத்தம் 29 அணிகள் 8 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு, 54 போட்டிகள் நடை பெற்றன. இறுதிப்போட்டியில் மகா ராஷ்டிராவை வீழ்த்தி இந்தியன் ரயில்வே அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. இது அந்த அணிக்கு 7ஆவது சாம்பியன் பட்டம் ஆகும். குறிப்பாக தொடர்ச்சியாக வென்றுள்ளது. மகாராஷ்டிரா வெள்ளிப்பதக்கத்தை யும், உத்தரப்பிரதேசம் மற்றும் சண்டிகர் அணிகள் வெண்கலப்பதக்கத்தையும் வென்றன. சிறந்த ரெய்டராக கோவா அணியின் பவானி ராஜ்புத் (58 ரெய்டு புள்ளிகள்), சிறந்த டிபெண்டராக இந்தியன் ரயில்வே அணியின் சுபம் ஷிண்டே (27 டேக்கிள் புள்ளிகள்) தேர்வு செய்யப்பட்டனர். இந்த தொட ரில் தமிழ்நாடு அணி காலிறுதிக்கு முந்தைய சுற்றிலேயே வெளி யேறியது.
