games

img

மகளிர் ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியில் இந்தியா வெண்கலப்பதக்கம்  

மகளிர் ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியில் சீனாவை தோற்கடித்து இந்திய வெண்கலப்பதக்கம் வென்றது.  

மகளிர் 10ஆவது ஆசிய கோப்பை ஹாக்கி போட்டிகள் ஓமன் தலைநகர் மஸ்கட்டில் நடைபெற்றது. இதன் இறுதிப்போட்டியில் ஜப்பான் 4-2 என்ற கோல் கணக்கில் தென்கொரியாவை வீழ்த்தி 3ஆவது முறையாக சாம்பியன் கோப்பையை வென்றது. அரையிறுதியில் தென்கொரியாவிடம் தோல்வி அடைந்த நடப்பு சாம்பியனான இந்திய அணி, அடுத்து 3ஆவது இடத்துக்கான ஆட்டத்தில் சீனாவுடன் நேற்று மோதியது.  

இப்போட்டியில் 2-0 என்ற கோல் கணக்கில் சீனாவை வீழ்த்தி இந்தியா 3ஆவது இடம் பிடித்து வெண்கலப்பதக்கம் வென்றது. 13ஆவது நிமிடத்தில் ஷர்மிளா தேவியும், 19ஆவது நிமிடத்தில் குர்ஜித் கவுரும் பெனால்டி கார்னர் வாய்ப்புகளை கோலாக்கி வெற்றிக்கு உதவினர்.