இந்தியா 2-0 மேற்கு இந்தியத் தீவுகள் அணி ஒயிட் வாஷ்
2 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்க மேற்கு இந்தியத் தீவுகள் கிரிக்கெட் அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. இந்த தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் (அகமதாபாத்) இந்தியா இன்னிங்ஸ் வெற்றியை (140 ரன்கள் வித்தியாசத்தில்) ருசித்த நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டி தில்லியில் வெள்ளிக்கிழமை அன்று தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி, பேட்டிங் தேர்வு செய்து முதலில் களமிறங்கியது. ஜெய்ஸ்வால் (173), கில் (129) ஆகியோர் சதத்தின் உதவியால், இந்திய அணி முதல் இன்னிங்சில் 134.2 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 518 ரன்கள் குவித்து டிக்ளர் செய்தது. தொடர்ந்து தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய மேற்கு இந்தியத் தீவுகள் அணி, இந்திய வீரர்கள் குல்தீப் (5), ஜடேஜா (3) சுழலை சமாளிக்க முடியாமல் 81.5 ஓவர்களில் 248 ரன்களுக்கு ஆட்டமிழந்து, பாலோ ஆன் பெற்றது. 270 ரன்கள் பின்னிலையுடன் தொடர்ந்து 2ஆவது இன்னிங்ஸை தொடங்கிய மேற்கு இந்தியத் தீவுகள் அணி ஜான் கேம்பல் (115), சாய் ஹோப் (103) ஆகியோரின் சதத்தின் உதவியால் 118.5 ஓவர்களில் 390 ரன்களுக்கு ஆட்டமிழந்து, இந்திய அணிக்கு 121 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்தது. இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக பும்ரா, குல்தீப் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். மிக எளிதான இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 35.2 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 124 ரன்கள் (வெற்றி இலக்கை விட 3 ரன்கள் அதிகம்) எடுத்து அபார வெற்றி பெற்றது. மேலும் 2-0 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை கைப்பற்றி மேற்கு இந்தியத் தீவுகள் அணியை ஒயிட் வாஷ் செய்தது. ஆட்டநாயனாக குல்தீப் தேர்வு செய்யப்பட்ட நிலையில், தொடர் நாயகனாக ஜடேஜா தேர்வு செய்யப்பட்டார். இருவரும் இந்திய வீரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மதுரையில் முதல் முறையாக உலகக்கோப்பை ஜூனியர் ஹாக்கி இந்திய ஹாக்கி சங்க அதிகாரிகள் ஆய்வு
14ஆவது சீசன் உலகக் கோப்பை ஜூனியர் ஹாக்கி போட்டிகள் இந்த ஆண்டு நவம்பர் 28 முதல் டிசம்பர் 10 வரை தமிழ்நாட்டின் சென்னை (மேயர் ராதாகிருஷ்ணன் மைதானம்), மதுரை நகரில் உள்ள ஹாக்கி மைதானங் களில் நடைபெற உள்ளது. இந்த தொடரில் உலகம் முழுவதுமிருந்து 12 அணிகள் மொத்தம் 34 போட்டி களில் பங்கேற்க உள்ளன. இந்திய ஹாக்கி சங்கம் மற்றும் தமிழ்நாடு ஹாக்கி சங்கம் இணைந்து நடத்தும் இப்போட்டிகளையொட்டி, ஹாக்கி இந்தியா செயலாளரும், ஏசி யன் ஹாக்கி பெடரேஷன் துணைத் தலைவருமான போலோநாத்சிங், தமிழக ஹாக்கி சங்கத் தலை வரும், இந்திய ஹாக்கி சங்க பொருளா ளருமான மனோகர், தமிழ்நாடு ஹாக்கி சங்கம் மற்றும் இந்திய ஹாக்கி சங்க அதிகாரிகள் செவ்வாயன்று மதுரை ஹாக்கி மைதானத்தை (ரேஸ் கோர்ஸ்) ஆய்வு செய்தனர். ஆய்வின் பின்னர் செய்தியாளர் களிடம் பேசிய போலோநாத்சிங் கூறு கையில், “ஜூனியர் உலகக்கோப்பை ஹாக்கி போட்டிகள் சென்னை மற்றும் மதுரையில் நடைபெறவுள்ளன. மதுரை மைதானம் போட்டிகளுக்குத் தயாராகி வருகிறது. தமிழக விளை யாட்டுத்துறை அமைச்சர் இதனை உறுதியாக முன்மொழிந்ததால், மதுரையில் இப்போட்டிகளை நடத்த தீர்மானிக்கப்பட்டது” என தெரிவித் தார். தமிழக ஹாக்கி சங்கத் தலைவர் மனோகர் கூறுகையில், “தமிழகத்தில் இதுவே முதல்முறையாக ஜூனியர் உலகக்கோப்பை ஹாக்கி போட்டி நடைபெறுகிறது. மொத்தம் 24 நாடுகள் பங்கேற்கின்றன. சென்னை மற்றும் மதுரையில் தலா 12 அணிகள் விளையாடும். மதுரையில் 34 போட்டி கள் நடைபெற, அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகள் சென்னையில் நடைபெறும். இந்திய அணி டிசம்பர் 3ஆம் தேதி மதுரையில் லீக் போட்டி யில் விளையாட உள்ளது. தென் தமிழக ஹாக்கி வீரர்கள் மற்றும் ரசி கர்கள் உலகத் தரத்திலான இந்தப் போட்டிகளை நேரில் காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது” என தெரிவித் தார். மதுரையில் உலகக்கோப்பை ஹாக்கி நடைபெறுவது இதுவே முதல் முறை என்பதால், தென் தமிழகம் முழு வதும் விளையாட்டு ஆர்வலர்களி டையே பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.