games

img

விளையாட்டு

விளையாட்டு உலகில் ஒரே நாளில் 2 அதிர்ச்சி நிகழ்வு தென் ஆப்பிரிக்கா... ஜோகோவிச்...

விளையாட்டு உலகில் சனிக் கிழமை அன்று எதிர் பார்க்க முடியாத 2 அதிர்ச்சி சம்பவங் கள் அரங்கேறியுள்ளன. ஒன்று டென்னிஸ் உலகில் அதிகம் அறியப் படாத நபரான மேனோகோ நாட்டின் வேலன்டின் சீனாவில் நடைபெற்று வரும் ஷாங்காய் ஓபன் டென்னிஸ் தொடரின் அரையிறுதி ஆட்டத்தில் அதிக கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற செர்பியாவின் ஜோகோ விச்சை வீழ்த்தி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.  அதே போல கிரிக்கெட் உலகின் அபாயகரமான அணிகளில் ஒன்றான தென் ஆப்பிரிக்கா அணி டி-20 போட்டி யில் இளம் அணியான நமீபியாவிடம் 4 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்து கிரிக்கெட் உலகில் அதிர்ச்சி ஏற்படுத்தியது.  ஒரே காரணம் 2 அதிர்ச்சி நிகழ்வுகளுக்கும் ஒரே  ஒரு காரணம் தான் இருக்கிறது. அது அலட்சியம் தான் தவிர வேறொன்று மில்லை. தரவரிசையில் இல்லாத வேலன்டின் என்ன செய்யப்போகிறார் என்று அலட்சியமாக விளையாடிய 24 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற சாதனையாளரான ஜோகோவிச் படுதோல்வி அடைந்துள்ளார்.  அதே போல உலக டெஸ்ட் சாம்பி யன்ஷிப் பட்டம் வென்ற நாடான நம்மை, இளம் அணியான நமீபியா என்ன செய்யப் போகிறது என்ற எண்ணத்தில் அலட்சியமாக விளை யாடி மண்ணை கவ்வியுள்ளது தென் ஆப்பிரிக்கா. விளையாட்டில் மட்டு மின்றி வாழ்க்கையில் அலட்சியம் மோசமானது என்பதை தென் ஆப்பிரிக்கா, ஜோகோவிச் தோல்வி களுடன் மீண்டும் எடுத்துக்காட்டி யுள்ளனர்.